Intha Pachai Kilikoru |
|---|
இந்த பச்சைக்கிளிக்கொரு
செவ்வந்தி பூவில் தொட்டிலை
கட்டி வைத்தேன்
அதில் பட்டு துகிலுடன்
அன்ன சிறகினை மெல்லென
இட்டு வைத்தேன்
நான் ஆராரோ
என்று தாலாட்ட இன்னும்
ஆராரோ வந்து பாராட்ட
எந்த குழந்தையும்
நல்ல குழந்தை தான்
மண்ணில் பிறக்கையிலே
பின் நல்லவராவதும்
தீயவராவதும்
அன்னை வளர்ப்பதிலே
நான் ஆராரோ
என்று தாலாட்ட இன்னும்
ஆராரோ வந்து பாராட்ட
தூக்க மருந்தினை
போன்றவை பெற்றவர்
போற்றும் புகழுரைகள்
நோய் தீர்க்கும்
மருந்தினை போன்றவை
கற்றவர்
கூறும் அறிவுரைகள்
இந்த பச்சைக்கிளிக்கொரு
செவ்வந்தி பூவில் தொட்டிலை
கட்டி வைத்தேன்
அதில் பட்டு
துகிலுடன் அன்ன
சிறகினை மெல்லென
இட்டு வைத்தேன்
ஆறு கரை
அடங்கி நடந்திடில்
காடு வளம் பெறலாம்
தினம் நல்ல நெறி
கண்டு பிள்ளை வளர்ந்திடில்
நாடும் நலம் பெறலாம்
நான் ஆராரோ
என்று தாலாட்ட இன்னும்
ஆராரோ வந்து பாராட்ட
பாதை தவறிய
கால்கள் விரும்பிய ஊர்
சென்று சேர்வதில்லை
நல்ல பண்பு தவறிய
பிள்ளையை பெற்றவர்
பேர் சொல்லி
வாழ்வதில்லை
இந்த பச்சைக்கிளிக்கொரு
செவ்வந்தி பூவில் தொட்டிலை
கட்டி வைத்தேன்
அதில் பட்டு துகிலுடன்
அன்ன சிறகினை மெல்லென
இட்டு வைத்தேன்
நான் ஆராரோ
என்று தாலாட்ட இன்னும்
ஆராரோ வந்து பாராட்ட
