Ippadiye Ada Ippadiye |
---|
இப்படியே அட இப்படியே
உன் கண்களில் நான் வாழ வேண்டுமடா
கண்மணியே என் கண்மணியே
இந்த சந்தோசம் எப்போதும் போதுமடா
அழகு முகங்கள் உலகில்
அட ஆயிரம் உண்டு பாருடா
மனசு முழுக்க அழகாய் இருக்கும்
ஆண் மகன் நீதானடா
முதல் முறை நெஞ்சு முழுவதும்
மழை தந்தது இங்கே நீதானே
உன்னருகில் நான் வாழும் யோகம்
என் அன்பே போதுமே
இப்படியே அட இப்படியே
உன் கண்களில் நான் வாழ வேண்டுமடா
கண்மணியே என் கண்மணியே இந்த
சந்தோசம் எப்போதும் போதுமடா
அன்பினை அன்பினால் ஜெயிக்க அடடா
சொல்லிக் கொடுத்தவள் நீயடி
உன்னிடம் என்னை தந்தது போக
மிச்சமும் இல்லை நானடி
இமைக்கும் நேரத்திலே
எனக்குள் வந்துவிட்டாய்
தாமதம் ஏதுமில்லை
என்னையும் மாற்றிவிட்டாய்
அம்மாடி கண்ணாடியும்
பெண்ணாக மாறியதே
நீ வைத்த பொட்டை வைத்து
உன் போல தோன்றியதே
உன்னுடன் வாழ்ந்திடும் நேரம்
சட்டென சேர்க்கிறேன் நானும்
எப்போதும் எனக்கு அதுவே போதும்
என்னவோ செய்கிறாய்
என்னடா செய்கிறாய்
எனக்கு புரியவில்லையே
உனக்குள் நானும் கரைந்து போனேன்
எனக்கு பிடித்த மழையே
உன்னோடு சேர்ந்திருக்கும்
நிழலும் நானடியே
உன் மனம் சேர்த்து வைக்கும்
நினைவும் நானடியே
பார்த்ததும் நீ படிப்பாய்
பார்வையில் என் மனதை
கேட்காமல் நீ தருவாய்
நெஞ்சோடு நினைத்ததை
இத்தனை காதலில் வாழ
ஜென்மங்கள் ஆயிரம் வேண்டாம்
இந்த நிமிடங்கள் போதும் போதும்