Iru Kangal Podhadhu Happy

Iru Kangal Podhadhu Happy Song Lyrics In English


இரு கண்கள் போதாது
ராசாத்தி ஊர்கோலத்தைப் பார்க்க

லாலா லலலா லாலா லாலா
லலலா லாலா லாலா லலலா
லால்ல லாலலலா லலலல லா

இரு கண்கள் போதாது
ராசாத்தி ஊர்கோலத்தைப் பார்க்க
என் இமையும் மூடாது
கல்யாணத் தேரில் உன்னைப் பார்க்க
ஆனந்தத்தால் விழி நீரிலே
பாடுகின்றேன் ஒரு பாடலே
வாழ்த்துச் சொல்லி பாடும் குயில் நான்

இரு கண்கள் போதாது
ராசாத்தி ஊர்கோலத்தைப் பார்க்க
என் இமையும் மூடாது
கல்யாணத் தேரில் உன்னைப் பார்க்க

அங்கே வானத்து வெண்ணிலவும்
ஊர்வலம் போகாமல்
நீ போகும் ஊர்வலத்தை ரசிக்காதோ
உந்தன் தோள்களில் ஆடும் மாலை
ஆனந்தம் தாங்காமல்
பார்க்கின்ற நெஞ்சை அள்ளி பறிக்காதோ

நான் கண்ட கல்யாணங்கள்
ஒன்றல்ல ஒரு நூறு
எங்கெங்கும் இது போல் ஜோடி
ஒரு போதும் அமையாது
என் பாட்டும் புதிர்கள் போடும்
அது உனக்கு புரிந்தால் போதும்
என் ராசாத்தி நீ வாழ்க

இரு கண்கள் போதாது
ராசாத்தி ஊர்கோலத்தைப் பார்க்க
என் இமையும் மூடாது
கல்யாணத் தேரில் உன்னைப் பார்க்க
ஆனந்தத்தால் விழி நீரிலே
பாடுகின்றேன் ஒரு பாடலே
வாழ்த்துச் சொல்லி பாடும் குயில் நான்


இரு கண்கள் போதாது
ராசாத்தி ஊர்கோலத்தைப் பார்க்க
என் இமையும் மூடாது
கல்யாணத் தேரில் உன்னைப் பார்க்க

கமபத பாம கரிகம பபா
அருவி போல் நடக்கும் கன்னிப் பொண்ணு
பதநி பாம கரிகம நிநீ
துடிக்குதோ மனது நின்னு நின்னு
ஸநிஸ நிஸ பபா
புதிய அனுபவம்
ஸநிஸ பத ததா
உனக்குக் கிடைத்ததோ
அழகு மலரிது மனதினை
சிறகென விரிக்கிறதோ

கெட்டி மேளங்கள் கேட்கும் போது
மகிழ்ந்திடும் நெஞ்சங்கள்
எட்டி என்னை விட்டுச் சென்றால் வருந்தாதா
மெட்டி ஓசைகள் மெல்லச் சொல்லும்
அன்பெனும் கீதங்கள்
கொட்டம் இட்ட நாட்கள் எல்லாம் திரும்பாதா
ஓ அந்த நாட்கள் எல்லாம் என் கண்ணில் ஆடாதோ
ஆனந்த ராகம் எல்லாம் கொண்டு வந்து தாராதோ
சிறு பொன்னே செல்லக் கண்ணே
அடி நீதான் திருமணப் பெண்ணே
புது ஆனந்தம் ஆரம்பம்

இரு கண்கள் போதாது
ராசாத்தி ஊர்கோலத்தைப் பார்க்க
என் இமையும் மூடாது
கல்யாணத் தேரில் உன்னைப் பார்க்க
ஆனந்தத்தால் விழி நீரிலே
பாடுகின்றேன் ஒரு பாடலே
வாழ்த்துச் சொல்லி பாடும் குயில் நான்

இரு கண்கள் போதாது
ராசாத்தி ஊர்கோலத்தைப் பார்க்க
என் இமையும் மூடாது
கல்யாணத் தேரில் உன்னைப் பார்க்க