Irukkirai |
---|
ஆஆஆ
இருக்கிறாய்
இல்லாமலும் இருக்கிறாய்
ஆதலால் இருக்கிறேன்
இல்லாமலும் இருக்கிறேன்
எங்கும் உன் முக
பிம்பம் நெஞ்சில் வந்தது
தாங்கும் வெற்றிடத்தில்
என்னை விட்டு சென்றதேனடி
கண்ணில் நீரது
பொங்கும் காதல் வந்தது
அங்கும் சற்று முன்பு
புன்னகைத்த முகம் எங்கடி
இருக்கிறாய்
இல்லாமலும் இருக்கிறாய்
ஆதலால் இருக்கிறேன்
இல்லாமலும் இருக்கிறேன்
வெளிச்சம் இல்லாமல்
நிழலும் இல்லை உயிா் நீ
இல்லாமல் நானும் இல்லை
விடிந்தும் என் வானில்
வண்ணம் இல்லை
பனியில் பாதைகள்
மூடும் வெயிலில் வழி வருமே
அருகினில் வருகையில்
உணா்கிற மயக்கத்தை
மறுபடி தா கொஞ்சம்
சுடுகிற மணல்வெளி
தொடுகிற காலென
கதறுது என் நெஞ்சம்
இனி வரும் இரவிலும்
இனி வரும் பகலிலும்
கனவுகள் என் தஞ்சம்
அங்கே வா உயிரே
இருக்கிறாய்
இல்லாமலும் இருக்கிறாய்
ஆதலால் இருக்கிறேன்
இல்லாமலும் இருக்கிறேன்
மாற்றம் இல்லாமல்
வாழ்க்கை இல்லை மழை
மட்டும் தராது வானவில்லை
ஏனோ என் நெஞ்சம் கேட்கவில்லை
அருகில் இருந்தும்
காதல் பிாிவில் பெருகிடுமே
ஒரு முறை தொியிது
மறு முறை மறையிது
தொலையிது உன் பிம்பம்
கனவுகள் வருவது
காலையில் களைவது
காதலில் போின்பம்
எதுவரை எதுவரை
இடைவெளி தொடா்ந்திடும்
கேட்குது என் நெஞ்சம்
அருகே வா உயிரே
இருக்கிறாய்
இல்லாமலும் இருக்கிறாய்
ஆதலால் இருக்கிறேன்
இல்லாமலும் இருக்கிறேன்