Ithu Arangetram Aagatha

Ithu Arangetram Aagatha Song Lyrics In English


லாலாலாலாலாலா
ஹா ஹா ஹா ஹா
லாலாலாலாலாலா
லாலாலா லாலா லா

இது அரங்கேற்றம் ஆகாத நாட்டியம்
இது அழகான மலராடும் நாடகம்
பனி மேடை மீது பாதங்கள்
தப்பிப் போடும் இன்ப தாளங்கள்
இது அரங்கேற்றம் ஆகாத நாட்டியம்
இது அழகான மலராடும் நாடகம்

இளமையில் சந்திக்கும்
இருமனம் சிந்திக்கும்
நினைவுகள் தித்திக்கும்
கவிதையில் வர்ணிக்கும்
கலைக்கூட நமக்காக உருவானதோ
இந்தக் கலைக்கூட நமக்காக உருவானதோ

பலகோடி எண்ணம் புரியாத வண்ணம்
பலகோடி எண்ணம் புரியாத வண்ணம்
கலைக் கொஞ்சும் கண்ணோடு கதை பேசுதோ

இது அரங்கேற்றம் ஆகாத நாட்டியம்
இது அழகான மலராடும் நாடகம்

இதயமும் வெட்கிக்கும்
இளமையில் ஒட்டிக்கும்
பனிமலர் கண்ணுக்குள்
பல வகை வைரங்கள்
விலை போட முடியாத சிலை அல்லவோ
இது விலை போட முடியாத சிலை அல்லவோ

கொடியாடும் பந்தல் முடியாமல் மெல்ல
கொடியாடும் பந்தல் முடியாமல் மெல்ல
சதிராடி வரும்போது சுகமல்லவோ


ஹா ஆஆஅ ஆஅ

இது அரங்கேற்றம் ஆகாத நாட்டியம்
இது அழகான மலராடும் நாடகம்

அவரவர் சொர்க்கங்கள்
அவரவர் பக்கத்தில்
சில சில சிற்பங்கள்
சிரி சிரி வெட்கத்தில்
இளமான்கள் அரசாளும் சாம்ராஜ்ஜியம்
இது இளமான்கள் அரசாளும் சாம்ராஜ்ஜியம்

மணிமாடம் உண்டு மலர் மஞ்சம் உண்டு
மணிமாடம் உண்டு மலர் மஞ்சம் உண்டு
அவையாவும் மனம் சேரும் திருநாளிது

இருவர் : இது அரங்கேற்றம் ஆகாத நாட்டியம்
இது அழகான மலராடும் நாடகம்