Jagadeeshwara Devi

Jagadeeshwara Devi Song Lyrics In English


பாடகர்  : அனுராக் குல்கர்னி

இசை அமைப்பாளர்  : மிக்கி ஜே மேயர்

ஜகதீஸ்வர தேவி புவனேஸ்வரி சதுர்வேதி பரிபூரண கலைவாணி கருனாஹரி அகிலாண்டரூபி

தீம் தான தீம் தீம் தான நிரந்தரி நானிலம் காக்கும் எங்கள் துரந்தரி ஆதிநீ அந்தம் இல்லா காதம்பரி பாராயோ வாராயோ தாயே நீ

சரணாகதி அருளும் நாத விநோதனி சகல சௌந்தரி நீ சாபங்கள் சூழுதே காத்திடு கைகொடு உனையன்றி வேறில்லையே

நீயே வழிகாட்டவா தீயோடு வேகின்ற வேருக்கு நீராகவா நீயே கரை சேர்க்கவா ஆறாத காயங்கள் சாய்கின்ற தோல் ஆகவா


யார் பிழையோ யார் சதியோ யார் இங்கு கூற யாதுமென ஆனவளே வா துயர் தீர பாதையெல்லாம் பேரொளியாய் உன் துணை கூட தீர்ந்திடும் கார் இருளே

தீம் தான தீம் தீம் தான நிரந்தரி நானிலம் காக்கும் எங்கள் துரந்தரி ஆதிநீ அந்தம் இல்லா காதம்பரி பாராயோ வாராயோ தாயே நீ

சரணாகதி அருளும் நாத விநோதனி சகல சௌந்தரி நீ சாபங்கள் சூழுதே காத்திடு கைகொடு உனையன்றி வேறில்லையே

தீம் தான தீம் தான தோம் தீம் தான தீம் தான தோம் தீம் தான தீம் தான தோம்