Jana Gana Mana |
---|
ஹ்ம்ம் ம்ம் ம்ம் ம்ம் ம்ம்ம்
ஹ்ம்ம் ம்ம் ம்ம் ம்ம்ம்ம் ம்ம்ம்
தன்ன நனன்ன்ன தானா னா
தன்ன நன்ன நனன்ன்னா தானா னா
தானா தர்ணா தன
தானா தர்ணா னா னா
தன்ன நன்னா நனன்னா னா னா
தன்ன நானா நன்னன்னா னா னா
ஜன கன மன என ஜதி சொல்லும் நேரம்
ஜனனமும் மரணமும் சந்திக்கும் காலம்
முடியும் நிகழ்ச்சி ஆஹா
மனதில் மகிழ்ச்சி துள்ளி எழ வேண்டும்
ஏன் அழ வேண்டும்
இந்த பூமிக்கு நன்றி சொல்லி
புறப்பட வேண்டும் ஆ ஆ ஆஆ ஆஆஆ
ஜன கன மன என ஜதி சொல்லும் நேரம்
ஜனனமும் மரணமும் சந்திக்கும் காலம்
ஜனிக்கும் உயிர்கள் சாகாமல் போனால்
தாங்காது தாங்காது
பூலோகம் என்னாவது
சுழலும் பூமி சுற்றாது சாமி
சுவாசிக்க முடியாது அப்போது என் செய்வது
காலம் வந்தால்
எதுவும் இங்கு நடக்கும்
நேரம் வந்தால் பறவை ரெக்கை துடிக்கும்
கிழக்கு வானம் அழைக்கும் நேரம்
கிளிகள் கூட்டம் பறக்கட்டும்
கீதங்கள் இசைக்கட்டும்
திசை எங்கே அதோ அங்கேஅங்கே
இந்த தரை வாழ்க்கை வெறும்
சிறை வாழ்க்கை
இந்த சிறை பட்ட சிலந்திக்கு
விடுதலை வேட்க்கை
ஜன கன மன என ஜதி சொல்லும் நேரம்
ஜனனமும் மரணமும் சந்திக்கும் காலம்
மழையின் துளிகள்
மண்ணோடு வீழ்ந்தால்
மழை கொண்ட சாவென்று
வான் மேகம்தான் சொல்லுமா
நகரும் நதிகள் கடலோடு சேர்ந்தால்
நதிகொண்ட சாவென்று
கடல் என்ன தடை சொல்லுமா
சங்கமிக்க இயற்கை கற்று தந்தது
சங்கமத்தால் உலகம் இன்னும் உள்ளது
பள்ளத்தில் சேரும் வெள்ளத்தை போலே
இயற்க்கையோடு கலக்கலாம்
ஜகத்தையே ஜெயிக்கலாம்
திசை எங்கே அதோ அங்கேஅங்கே
இருவர் : இதில் தலை எங்கே
அட வால் எங்கே
இந்த கேள்விக்கு விடை சொல்லும்
ஞானிகள் எங்கே
ஆஹ் ஆஹ் ஆஅஹ் ஆஹ் ஆஹ் ஆஹ்
ஜன கன மன என ஜதி சொல்லும் நேரம்
ஜனனமும் மரணமும் சந்திக்கும் காலம்
முடியும் நிகழ்ச்சி ஆஹா
மனதில் மகிழ்ச்சி துள்ளி எழ வேண்டும்
ஏன் அழ வேண்டும்
இந்த பூமிக்கு நன்றி சொல்லி
புறப்பட வேண்டும் ஆ ஆ ஆஆ ஆஆஆ
ஜன கன மன என ஜதி சொல்லும் நேரம்
ஜனனமும் மரணமும் சந்திக்கும் காலம்