July Pathinaaru Vanthaal |
---|
ஜூலை பதினாறு வந்தால்
வயது பதினேழுதான்
கன்னம் என் கன்னம் கண்டால்
வயது பதினாலுதான்
எனது மலர்கள் மலர்த்தும் ஒருவன்
எங்கு பிறந்தானோ ஓஓஓஓஹ்
ஏப்ரல் பதினொன்று வந்தால்
வயது மூவேழுதான்
வண்ண திருமேனி கண்டால்
வயது பதினேழுதான்
வாழ்வின் கோப்பை நிறைக்கும் ஒருத்தி
எங்கு பிறந்தாளோஓஓஓஓஹ்
காதல் மேல் காதல் கொள்ள வந்தேன்
காதல்தான் என்னை காணவில்லை
காதல்தான் தேர்வில்லாத பள்ளி
கல்லாமல் நானும் போவதில்லை
அந்த கண்ணாளன் முகம் காணவே
என் கண்கள் பூத்தாடுதே
அந்த பொன் நாளும் கை கூடவே
என் மார்பு கூத்தாடுதே
ஏப்ரல் பதினொன்று வந்தால்
வயது மூவேழுதான்
வண்ண திருமேனி கண்டால்
வயது பதினேழுதான்
வாழ்வின் கோப்பை நிறைக்கும் ஒருத்தி
எங்கு பிறந்தாளோஓஓஓஓஹ்
கண் பார்த்து கண்கள் காதல் கொள்ளும்
மெய் காதல் தேடும் எந்தன் உள்ளம்
பொய் காதல் தன்னை மட்டும் காணும்
மெய் காதல் இன்னோர் ஜீவன் பேணும்
என் உடல் எங்கும் கண்ணாகவே
என் காதல் நான் தேடுவேன்
அது நிறைவேறும் திருநாளிலே
எவரெஸ்ட்டில் நான் பாடுவேன் ஏஹ் ஏஹ்
ஜூலை பதினாறு வந்தால்
வயது பதினேழுதான்
வண்ண திருமேனி கண்டால்
வயது பதினேழுதான்
எனது மலர்கள் மலர்த்தும் ஒருவன்
எங்கு பிறந்தானோ