Kaalai Adhikaalai

Kaalai Adhikaalai Song Lyrics In English


ஹாஆஅஆ
ஹஆஅஆஅஆஅஹாஆ

காலை அதிகாலை
என் கால்கள் தரைமேலே
நீளுகின்ற சாலையை
ஆளுகின்ற நான்

காலை அதிகாலை
மென் பூக்கள் விழி மேலே
வெள்ளையாகும் பூமியில்
பிள்ளையாக நான்

மூச்சுக்காற்று தூய்மையாக
மேனி எங்கும் நீர் பூக்க
கோடை ஒன்றை போலவே
ஓடுகின்ற நான்

அதிகாலையே அதிகாலையே
முதல் காதல் நீதானே
அதிகாலையே அதிகாலையே
தினம் தினம் உனை மணந்திட
புதிதென பிறந்திடவே



உந்தன் பெருமைகளை
இங்கு யாரும் அறியவில்லை
விழி மூடிக் கனவொன்று
இந்த ஊரும் கிடைக்கிறதே

நீண்ட இரவுகளை
உந்தன் பார்வை கரைந்திடுமே
எனக்கென்று நீ தினம் தோன்ற
இந்த உள்ளம் துடிக்கிறதே

வைர வைகரை எனக்கெனதானே
இந்த தாமரை மலர் துணை
துளிர்த்திட தினம் தினம்
எனக்கென ஒலித்திடுதே




காலை அதிகாலை
என் கால்கள் தரைமேலே
நீளுகின்ற சாலையை
ஆளுகின்ற நான்

காலை அதிகாலை
மென் பூக்கள் விழி மேலே
வெள்ளையாகும் பூமியில்
பிள்ளையாக நான்

நெஞ்சம் கொஞ்சம் வேகமாக
ரத்தம் மொத்தம் சுத்தமாக
இன்று எந்தன் வானிலே
மின்னுகின்ற நான்

அதிகாலையே அதிகாலையே
முதல் காதல் நீதானே
அதிகாலையே அதிகாலையே
தினம் தினம் உனை மணந்திட
புதிதென பிறந்திடவே



காலை அதிகாலை