Kaalaiyila Kan Muzhichu |
|---|
காலையில கண் முழிச்சு
நான் சூரியனக் கண்டதில்ல
கண்டதெல்லாம் தாய் முகத்த
என் தாயப் போல யாரும் இல்ல
தானாப் பொறந்ததாரு
இங்க தானா வளந்ததாரு
தொப்புள் கொடி அறுந்தா தீருமா
கூட ஒட்டி வந்த ஒறவும் மாறுமா
காலையில கண் முழிச்சு
நான் சூரியனக் கண்டதில்ல
கோழி முழிக்கும் முன்ன
கண்ண முழிச்சு
என்னச் சீராகப் பாத்ததாரு
மாடா ஒழச்சு
பெரும் பாடாகப் பட்டு
வெறும் ஓடாகத் தேய்ஞ்சதாரு
ஓ சிறகு வரும் முன்னே
பறந்ததும் யாரு
நெறஞ்ச அந்த மனச கலங்க வெச்சதாரு
பக்கம் உள்ள சொந்தம்
வெகு தூரம் ஆனதென்ன
தூரம் ஆன சோகம்
என் சொந்தம் ஆனதென்ன
ஒத்தையில நான் ஒத்தையில
காலையில கண் முழிச்சு
நான் சூரியனக் கண்டதில்ல
காலையில கண் முழிச்சு
என் சோகம் சொல்லும்
சிறு சின்னக் குயிலு
அது கேக்காம போற ராசா
தத்தளிக்கும்
இந்தத் தங்க மயிலுக்கு
வார்த்த ஒண்ணு சொல்லு ராசா
ஓ கனவில் ஒன் உருவம்
தெனமும் வந்து போகுதே
செண்பக வாசம் மனசெல்லாம் வேகுதே
முல்லப் பூவு தோட்டம்
சிறு கள்ளி வேலி ஆச்சு
கள்ளியிலும் பூவு அது
கேலி சொல்லும் பேச்சு
கேக்கலியா ஹோய் கேக்கலியா
காலையில கண் முழிச்சு
நான் சூரியனக் கண்டதில்ல
கண்டதெல்லாம் தாய் முகத்த
என் தாயப் போல யாரும் இல்ல
தானாப் பொறந்ததாரு
இங்க தானா வளந்ததாரு
தொப்புள் கொடி அறுந்தா தீருமா
கூட ஒட்டி வந்த ஒறவும் மாறுமா
காலையில கண் முழிச்சு
நான் சூரியனக் கண்டதில்ல
காலையில கண் முழிச்சு
