Kaalam Enumoru Aazhakkadalinil

Kaalam Enumoru Aazhakkadalinil Song Lyrics In English




ஹாஆஆஅ

ஹாஆஆஅ

காலம் எனுமொரு ஆழக் கடலினில் காதல் படகும் விளையாடுதம்மா ஆடும் படகினில் மருவிய கண்கள் பேசுவதும் பெருங்கதையம்மா கதையம்மா கதையம்மா காதல் என்றொரு கதையம்மா



காலம் என்றொரு ஆழக் கடலினில் காதல் படகும் விளையாடி வர ஆடும் படகினில் மருவிய கண்கள் பேசுவதும் ஒரு கதை தானோ கதை தானோ கதை தானோ காதல் என்பது கதை தானோ

ஹாஆஅஆ

கனியாகிக் காயானால் கதைதானே மானே காயான வாழ்வு கொண்டேன் என் செய்வேன் நானே கனியாகிக் காயானால் கதைதானே மானே காயான வாழ்வு கொண்டேன் என் செய்வேன் நானே


பொருந்தாத நேசம் இல்லை பொய் ஏதும் இல்லை பொருந்தாத நேசம் இல்லை பொய் ஏதும் இல்லை இருந்தாலும் இன்பமில்லை ஏன் இன்பம் இல்லை! இருந்தாலும் இன்பமில்லை ஏன் இன்பம் இல்லை!

உருளும் கருவிழி மருளும் பைங்கிளி உறவினில் ஒன்றும் குறைவில்லை உண்மையில் அடி பெண் மயிலே உன் உரிமையில் என்றும் தடையில்லை

இருவர் : ஹாஆஅஆஆ

காலம் எனுமொரு ஆழக் கடலினில் காதல் படகும் விளையாடுதம்மா ஆடும் படகினில் மருவிய கண்கள் பேசுவதும் பெருங்கதையம்மா

கதை தானோ கதையம்மா கதையம்மா காதல் என்பது கதை தானோ காதல் என்றொரு கதையம்மா

இருவர் : ஹாஆஅஆஆ