Kaalamennum Nadhiyinile |
---|
காலம் என்னும்
நதியினிலே காதல் என்னும்
படகு விட்டேன் மாலை
வரை ஓட்டி வந்தேன் மறு
கரைக்கு கூட்டி வந்தேன்
காலம் என்னும்
நதியினிலே காதல் என்னும்
படகு விட்டேன் மாலை
வரை ஓட்டி வந்தேன் மறு
கரைக்கு கூட்டி வந்தேன்
காலம்
என்னும் நதியினிலே
ஓடம் என்று
நினைத்திருந்தேன் ஓடும்
என்று நினைத்ததில்லை
ஓடம் என்று நினைத்திருந்தேன்
ஓடும் என்று நினைத்ததில்லை
நாடும் என்றே
நாடி நின்றேன் நாடகம்
என்று எண்ணவில்லை
நாடும் என்றே நாடி
நின்றேன் நாடகம் என்று
எண்ணவில்லை
காலம்
என்னும் நதியினிலே
இதயம் என்ற
கூட்டினிலே இருவருக்கு
இடமில்லை இதயம் என்ற
கூட்டினிலே இருவருக்கு
இடமில்லை
ஒருவனுக்கே
ஒருத்தி என்றே உலகை
விட்டே ஓடுகின்றேன்
ஒருவனுக்கே ஒருத்தி
என்றே உலகை விட்டே
ஓடுகின்றேன்
காலம் என்னும்
நதியினிலே காதல் என்னும்
படகு விட்டேன் மாலை
வரை ஓட்டி வந்தேன் மறு
கரைக்கு கூட்டி வந்தேன்
காலம்
என்னும் நதியினிலே
தேவனவன்
திருவடிகள் வருகவே
சிந்தனைக்கு அமைதி
என்றும் தருகவே கூடும்
இளங்காதலர்கள் வாழ்கவே
காதல் கொண்டவர்கள்
தோல்வியின்றி வாழ்கவே
வாழ்கவே வாழ்கவே