Kaangeyam Kaalaigale

Kaangeyam Kaalaigale Song Lyrics In English


லலலா லலலா லல லா
லல்லல்லா

பாத்து அப்படி நட ராசா
அது அது

காங்கேயங் காளைகளே
ஓடுங்கடா கவர்மெண்ட்டு சாலையிலே
காங்கேயங் காளைகளே
ஓடுங்கடா கவர்மெண்ட்டு சாலையிலே
காலு வலி தெரியாம
நானும் பாட்டு பாடிக்கிட்டு வாரேன்
காலு வலி தெரியாம
நானும் பாட்டு பாடிக்கிட்டு வாரேன்

மருதண்ணனுக்கு கல்யாணம் பண்ண
பொண்ணு தேடிக்கிட்டு போறேன்
உனக்கு என்ன வேணும் கேளு தாறேன்

காங்கேயங் காளைகளே
ஓடுங்கடா கவர்மெண்ட்டு சாலையிலே
காலு வலி தெரியாம
நானும் பாட்டு பாடிக்கிட்டு வாரேன்

ஏன்டா பழனியப்பா
எரும மாடு மாதிரி வளந்திருக்குறியே
ஒனக்கு எப்ப கண்ணாலம்

எனக்கா பாட்டி

விக்கும் வெலவாசியில
ஏதுமில்ல ஓசியில
விக்கும் வெலவாசியில ஆமா
ஏதுமில்ல ஓசியில
வேல மட்டும் நல்ல செய்வேன்
வேண்டிய மட்டும் நல்லா தின்பேன்
சம்பளத்துக்கேத்தபடி
சம்சாரத்த தேடிக்கணும்
சம்பளமில்ல கிம்பளமில்ல
பொஞ்சாதியும் தேவையில்லை

காங்கேயங் காளைகளே
ஓடுங்கடா கவர்மெண்ட்டு சாலையிலே
காலு வலி தெரியாம
நானும் பாட்டு பா

அண்ணே அண்ணே அண்ணே
அண்ணே அண்ணே
என்னன்னே கேட்டு மூடிட்டீங்க

ஏய் கேட்டு தானே மூடுனேன்
கேன பயலே
கேக்காம மூடுனா தான்டா தப்பு
பேசாம வந்தியா ஓரமா நிறுத்திப்புட்டு
ரயிலு வருது வேடிக்க பாத்துட்டு போ

ஆமாமா
அதுல ஏதாவது
பொண்ணு வருதான்னு பார்க்குறேன்


மூக்கு முழி நல்லாருக்கும்
முத்து முத்தா பல் இருக்கும்
மூக்கு முழி நல்லாருக்கும்
முத்து முத்தா பல் இருக்கும்
பேச்சுக்கூட அல்வாதுண்டா
அன்பாருந்தா நல்லாருக்கும்
குத்தம் ஏதும் இல்லாமே
நித்தம் கொற சொல்லாமே
கண்ணுக்கழகா பொண்ணு கெடச்சா
நிச்சியமும் பண்ணிடுவேன்

காங்கேயங் காளைகளே
ஓடுங்கடா கவர்மெண்ட்டு சாலையிலே
தனனத் தனனத் தந்தன்னானா
தனன தனனத் தனன

அண்ணே அண்ணே அண்ணே
அண்ணே ஓஓஓ
வண்டிய நிறுத்துடா
வண்டிய நிறுத்து
எங்க இந்த பக்கம்

சந்தைக்கு போறேன்ணே

எங்கண்ணனுக்கு பொண்ணு
பாக்க போறேன்

ஏன்டா கிறுக்கு பயலே
சந்தையில மாடு கன்னுதான்
வாங்குவாங்க
மதனியுமா வாங்குவாங்க
ஒங்கண்ணனுக்கு எவன்டா
பொண்ணு கொடுப்பான்
அவன் வேலை வெட்டி இல்லாம
கட்சி கட்ச்சின்னு சுத்திக்கிட்டுருக்கான்
டேய்ஆட்சிய புடிக்கிறேன்
ஆட்சிய புடிக்கிறேன்னு
காரைக்குடி பக்கம் போய் சொல்லிட போறான்டா
போட்டு அடிச்சு புடுவாக

அட நீங்க ஒன்னுணே
எங்கண்ணனுக்கு என்ன கொறைச்சல்

சொத்துப்பத்து எக்கச்சக்கம்
ஓஹோ
நஞ்சை புஞ்சை நாலுப்பக்கம்
அப்படியா

சொத்துப் பத்து எக்கச்சக்கம்
நஞ்சை புஞ்சை நாலுப்பக்கம்
ஏல மல காடுகளுண்டு
வீடுகளுண்டு எல்லாமுண்டு
தேர்தலுல அண்ணன் நின்னா
ஜெயிக்கிறது எங்க கட்சி
அண்ணன் ஜெயிச்சா மந்திரியடா
ஆட்சி எங்க கையிலடா

காங்கேயங் காளைகளே
ஓடுங்கடா கவர்மெண்ட்டு சாலையிலே
காலு வலி தெரியாம
நானும் பாட்டு பாடிக்கிட்டு வாரேன்

மருதண்ணனுக்கு கல்யாணம் பண்ண
பொண்ணு தேடிக்கிட்டு போறேன்
உனக்கு என்ன வேணும் கேளு தாறேன் ஆமா
பொண்ணு தேடிக்கிட்டு போறேன்
உனக்கு என்ன வேணும் கேளு தாறேன் ஆமா