Kaatru Pudhidhaai

Kaatru Pudhidhaai Song Lyrics In English


இசை அமைப்பாளர் : வித்யாசாகர்



காற்று புதிதாய் வீசக்கண்டேன்
காதல் கவிதை பேசக்கண்டேன்
சிநேகம் இனிதாய் சேரக்கண்டேன்
நான் கண்டேன்

காலம் செய்யும் மாயம் கண்டேன்
கால்கள் நான்காய் மாறக்கண்டேன்
உள்ளம் கையில் உலகம் கண்டேன்
நான் கண்டேன்



காற்று புதிதாய் வீசக்கண்டேன்
காதல் கவிதை பேசக்கண்டேன்
சிநேகம் இனிதாய் சேரக்கண்டேன்
நான் கண்டேன்

தொல்லைகளே இனி இல்லை என
இள வேனில் ராகம் பாடும்
எல்லைகளே இனி இல்லை என
திசை யாவும் கையில் சேரும்

புதிர் போல தோன்றினாலும்
புது பாதை இன்பம் ஆகும்
இள நெஞ்சிலே இசை தென்றலே
அதை நான் கண்டேன்
வாவ்வூ
சுகம் நான் கண்டேன்




காற்று புதிதாய் வீசக்கண்டேன்
காதல் கவிதை பேசக்கண்டேன்
சிநேகம் இனிதாய் சேரக்கண்டேன்
நான் கண்டேன்

கொஞ்சுவதும் எனை மிஞ்சுவதும்
சிறு குழந்தை போல தோன்றும்
அஞ்சுவதும் அதில் எஞ்சுவதும்
இள வயதில் தூளி ஆட்டும்

விளையாடும் அன்பினாலே
நடை போட நாட்கள் பூக்கும்
உனதன்பிலே பல மின்னலே
அதை நான் கண்டேன்
வாவ் வாவ் வாவ்வூ
எனை நான் கண்டேன்



காற்று புதிதாய் வீசக்கண்டேன்
காதல் கவிதை பேசக்கண்டேன்
சிநேகம் இனிதாய் சேரக்கண்டேன்
நான் கண்டேன்

காலம் செய்யும் மாயம் கண்டேன்
கால்கள் நான்காய் மாறக்கண்டேன்
உள்ளம் கையில் உலகம் கண்டேன்
நான் கண்டேன்