Kaavalukku Saamy

Kaavalukku Saamy Song Lyrics In English


காவலுக்கு சாமி உண்டு கஞ்சி ஊத்த பூமி உண்டு
காவலுக்கு சாமி உண்டு கஞ்சி ஊத்த பூமி உண்டு
அடி பச்சப்பசேலென்று நஞ்சக் காடு புஞ்சக் காடு
பொன் விளையும் நல்ல பண்ணக் காடுதான்
அடி அக்கம் பக்கம் வண்ண தென்னஞ்சோலை புன்னஞ்சோலை
நிக்கிது பார் இது நம்ம ஊருதான்
காவலுக்கு சாமி உண்டு கஞ்சி ஊத்த பூமி உண்டுஹே

மடையில் மணி வாத்து நீந்தும்
துணையை எதிர்ப்பார்த்து நீந்தும்
கிளையில் இளம் மூங்கில் ஆடும்
அதன் மேல் கிளி ஊஞ்சல் ஆடும்

செங்கழனி சேத்துலதான்
சின்னஞ்சிறு நாத்து வரும்
அடி சின்னஞ்சிறு நாத்தோடுதான்
சேதி சொல்ல காத்து வரும்

செங்கழனி சேத்துலதான்
சின்னஞ்சிறு நாத்து வரும்
அடி சின்னஞ்சிறு நாத்தோடுதான்
சேதி சொல்ல காத்து வரும்

ஆஹா கண்ணுக்கும் நெஞ்சுக்கும்
என்னென்ன இன்பம்தான்
உள்ளபடி இந்த ஊரப் போல ஊருமில்ல
சொல்லப் போனா இந்த
மண்ணப் போல மண்ணுமில்ல
காவலுக்கு சாமி உண்டு கஞ்சி ஊத்த பூமி உண்டுஹு

நெலம்தான் இங்கு வானம் பாத்தா
தரிசா நின்னு வாடி வேர்த்தா
தருவா மழை மாரியாத்தா
அவள் இங்கு யாரு காத்தா


பொங்க வச்சு பூஜ வச்சு
பம்ப தட்டும் ஓசை வர
அட கும்பிட்டதும் கூப்பிட்டதும்
தாயிருக்கா ஓடி வர

பொங்க வச்சு பூஜ வச்சு
பம்ப தட்டும் ஓசை வர
அட கும்பிட்டதும் கூப்பிட்டதும்
தாயிருக்கா ஓடி வர

ஆஹா அந்நாளும் இந்நாளும்
எந்நாளும் கும்மாளம்
எப்பவுமே நல்ல நேரம் காலம் வாய்ச்சிருக்கு
நட்டதெல்லாம் நல்ல பூவும் பிஞ்சா காய்ச்சிருக்கு

காவலுக்கு சாமி உண்டு கஞ்சி ஊத்த பூமி உண்டு
காவலுக்கு சாமி உண்டு கஞ்சி ஊத்த பூமி உண்டு
அடி பச்சப்பசேலென்று நஞ்சக் காடு புஞ்சக் காடு
பொன் விளையும் நல்ல பண்ணக் காடுதான்
அடி அக்கம் பக்கம் வண்ண
தென்னஞ்சோலை புன்னஞ்சோலை
நிக்கிது பார் இது நம்ம ஊருதான்