Kadaloram Vangiya Katru

Kadaloram Vangiya Katru Song Lyrics In English


கடலோரம்
வாங்கிய காத்து குளிராக
இருந்தது நேத்து

கதகதப்பா
மாறிடுமோ காதலித்தால்
ஆறிடுமோ

கடலோரம்
வாங்கிய காத்து குளிராக
இருந்தது நேத்து

சிறு மணல் வீட்டில்
குடி ஏறும் நண்டானது இவள்
கண் பார்த்து மீன் என்று
திண்டாடுது

பொங்கும் நுரையோடு
கரை ஏறும் அலையானது
இந்த பெண் பார்த்து
நிலவென்று விளையாடுது

கடலோரம் வாங்கிய
காத்து குளிராக இருந்தது
நேத்து

வண்ண பூ சேலை
மலர் மேனி மறைக்கின்றது
அதை பூங்காற்று மெதுவாக
இழுக்கின்றது

இடம் கொடுக்காமல்
தளிர் கைகள் தடுக்கின்றது
வெட்கம் தாளாமல் இளம்
நெஞ்சம் துடிக்கின்றது


கடலோரம் வாங்கிய
காத்து குளிராக இருந்தது
நேத்து

கோயில் சிலை
ஒன்று உயிர் கொண்டு நடை
போட்டதோ இரு விழி கொண்டு
என்னை பார்த்து எடை போட்டதோ

ஒரு துணை வந்து
விலை கொள்ள தடை
போட்டதோ அதை நான்
வாங்க அவள் நாணம்
தடை போட்டதோ

கடலோரம் வாங்கிய
காத்து குளிராக இருந்தது
நேத்து

கதகதப்பா மாறிடுமோ
காதலித்தால் ஆறிடுமோ

கடலோரம் வாங்கிய
காத்து குளிராக இருந்தது
நேத்து