Kadavul Poota Kanakku |
---|
கடவுள் போட்ட கணக்கு
தெரிவதில்லை நமக்கு
கடவுள் போட்ட கணக்கு
தெரிவதில்லை நமக்கு
நீ நினைப்பாய் ஒன்று அட
அவன் நினைப்பான் ஒன்று
நீ நினைப்பாய் ஒன்று அட
அவன் நினைப்பான் ஒன்று
கோடம்பாக்கம் குடியிருக்கும்
பழனியப்பா
இவன் கோரிக்கையை கொஞ்சம் நீ
கவனியப்பா
எப்போ கோடம்பாக்கம் குடியிருக்கும்
பழனியப்பா
இவன் கோரிக்கையை கொஞ்சம் நீ
கவனியப்பா
ஓடி போன மகள் கெடச்சா
மொட்டை போடுவான்
உன் உண்டியிலே ஏதோ கொஞ்சம்
துட்டப் போடுவான்
அந்த தசரதனை வாட்டியதோ
புத்திர சோகம்
இந்த தகப்பனுக்கு ஏற்பட்டதோ
பத்திர சோகம்
கடவுள் போட்ட கணக்கு
தெரிவதில்லை நமக்கு
கடவுள் போட்ட கணக்கு
தெரிவதில்லை நமக்கு
மாடவீதி குடியிருக்கும்
கற்பகாம்பிகே
இவன் மகள் இங்கு வந்து சேர
என்ன காணிக்கை
கெடுபிடியாக இருந்தான்
என்னவாச்சு
வீரதீர ரோசம் எல்லாம்
எங்கே போச்சு
ஒரு மகள் காதலிச்சா அப்படியாச்சு
இப்போ இன்னொருத்தி
கதை சொன்னா இப்படியாச்சு
காதலிலே வெற்றிக் கண்டாய்
கண்ண பரமாத்மா உன் போல்
இவனும் ஒரு பெண்ணை இங்கு
காதலித்த ஆத்மா