Kadhai Solla Poren |
---|
மூக்கு செவந்தவளேஏஏ
முன் கொசுவம் வச்சவளே
தேயிலைய கிள்ளி புட்டா
திரும்பவும் துளிர் விடுமே
ஆவி கிள்ளி போனவளே
அடுத்து எப்போ உயிர் வருமோ
கதை சொல்ல போறேன்
விடுகதை சொல்ல போறேன்
கதை சொல்ல போறேன்
விடுகதை சொல்ல போறேன்
என் விடுகதைக்கு விடைய சொன்னா
சொத்த எழுதி தாறேன்
சொல்லுங்க மாப்பிள்ளை சொல்லுங்க
உங்க விடுகதையை சொல்லுங்க
சொல்லுங்க மாப்பிள்ளை சொல்லுங்க
உங்க விடுகதையை சொல்லுங்க
முத்து முத்தா விடையை சொன்னா
ரொக்கம் அள்ளி கொடுங்க
இல்ல தப்பு தப்பாய் பதில சொன்னா
சம்பளத்தில் பிடிங்க
கேக்க ஒரு காதில்லை
பாக்க ஒரு கண்ணில்லை
பேச ஒரு வாயில்லை எனக்கு
என்ன தேடி வந்தா
நீதி உண்டு உனக்கு
நான் யாருநான் யாரு
தராசு அ தாரசு
ஆஹா சபாஷ்
கதை சொல்ல போறோம்
விடுகதை சொல்ல போறோம்
கதை சொல்ல போறோம்
விடுகதை சொல்ல போறோம்
என் விடுகதைக்கு விடைய சொன்னா
சொத்த எழுதி தாறோம்
சொல்லுங்க சொல்லுங்க சொல்லுங்க
உங்க விடுகதையை சொல்லுங்க
சொல்லுங்க சொல்லுங்க சொல்லுங்க
உங்க விடுகதையை சொல்லுங்க
பருப்பு கொழம்பு மணப்பதேன்
நெய் ஊற்றி இருபாங்கப்பா
படை வீரன் சாவதேன்
ஊசி போன பருப்பு கொழம்பு
தின்னிருப்பானோ
எங்க திருப்பி சொல்லுங்க
பருப்பு கொழம்பு மணப்பதேன்
படை வீரன் சாவதேன்
பெருங்காயத்தால்
பெருங் காயத்தால்
கதை சொல்ல போறேன்
விடுகதை சொல்ல போறேன்
நீயுமா
என் விடுகதைக்கு விடைய சொன்னா
சொத்த எழுதி தாறேன்
சொல்லுங்க பாட்டி சொல்லுங்க
உங்க விடுகதைய சொல்லுங்க
சொல்லுங்க பாட்டி சொல்லுங்க
உங்க விடுகதைய சொல்லுங்க
எருக்க இலை பழுப்பதேன்
கிழிஞ்சது போ
எருமை கண்ணு அழுவதேன்
எருக்க இல்லை எடுத்து
எருமை கண்ணுக்கு போட்ட தின்னுட்டு போது
மேல சொல்லு
எருக்க இலை பழுப்பதேன்
எருமை கண்ணு அழுவதேன்
பால் வத்திபோனால்
பால் வத்திபோனால்
மாப்பிள்ளை ஆயுசு பூரா
முழிச்சுட்டு நிக்கிற மாதிரி ஒன்னு
எடுத்து விடுங்க பாக்கலாம்
உனக்குள் இருக்கு எனக்குள் இருக்கு
உயிரும் இல்லை
ஹ்ம்ம் ஹ்ம்ம்
கையில் சிக்காது கண்ணில் தெரியாது
காற்றும் இல்லை
ஹோ ஹோ
உணர்ச்சி இருந்தாலும் உருவம் இருக்காது
கடவளும் இல்லை
ஹோ ஹோ
இது இல்லாத தேசம் எதுவும் கிடையாது
வானமும் இல்லை
அது என்ன அது என்ன
அதான் அதான்யா காதல்