Kadhal Podhum

Kadhal Podhum Song Lyrics In English


காதல் போதும்
காதல் போதும்
எப்போது அள்ளி அணைப்பாய்
காதல் போதும்
காதல் போதும்
எப்போது முத்தமிடுவாய்

கண் மூடும்
கனவிலும் நுழைகின்றாய்
கை கூட எந்நாளும்
மறக்கின்றாய்
எனக்குள் விழுவாய் மழை துளியாய்
எனை நான் தருவேன் புது மலராய்

காதல் போதும்
காதல் போதும்
எப்போது அள்ளி அணைப்பாய்

இங்கே ஆண்களில்
நீதான் அழகு
உலகம் முழுதும் உரைத்தேன்
ரோஜா பூக்கள் உன்னிறம் தோற்கும்
இருளில்கூட ரசிப்பேன்

ஐஸ்வர்யா உன்னிடத்தில்
ஆட்டோகிராப் வாங்குவாள்
சல்மான்கான் என்னிடத்தில்
ஒரு கம்ப்ளைன்ட் பண்ணுவான்

திறந்த மார்பில்
என் முகம் புதைப்பேன்
உன் இதய துடிப்பில்
என் பெயர் கேட்ப்பேன்
தள்ளி தள்ளி போகாதேடா
உன்னை வழங்கு

காதல் போதும்
காதல் போதும்
எப்போது அள்ளி அணைப்பாய்



உன் இதயம் நழுவி
என் வசம் விழுந்தால்
புதிதாய் நானும் பிறப்பேன்
உன் விழிகள் அசைத்து
சிக்னல் தந்தாள்
உலகை நானும் ரசிப்பேன்

அழகான உன்னை கண்டால்
அஜித்யும் அஞ்சலாம்
ஸ்டைலாக நீ நடந்தால்
விஜயை மிஞ்சலாம்

நிலவுகூட
உன்னிடம் வெளிச்சம் கேட்க்கும்
சூரியன்கூட
உன்னிடம் வெப்பம் கேட்க்கும்
தள்ளி தள்ளி போகாதேடா
உன்னை வழங்கு

காதல் போதும்
காதல் போதும்
எப்போது அள்ளி அணைப்பாய்
காதல் போதும்
காதல் போதும்
எப்போது முத்தமிடுவாய்

கண் மூடும்
கனவிலும் நுழைகின்றாய்
கை கூட எந்நாளும்
மறக்கின்றாய்
எனக்குள் விழுவாய் மழை துளியாய்
எனை நான் தருவேன் புது மலராய்

காதல் போதும்
காதல் போதும்
எப்போது அள்ளி அணைப்பாய்