Kadhal Vettukili

Kadhal Vettukili Song Lyrics In English


காதல் வெட்டுக்கிளி
கண்ணை கடிச்சிருச்சே
கன்னம் குழியினில்
துள்ளி குதிச்சிருச்சே

இதழ்கள் கடந்தே
இதயம் வழியே
இடையை தொடுதே

காதல் வெட்டுக்கிளி
கண்ணை கடிச்சிருச்சே
கன்னம் குழியினில்
துள்ளி குதிச்சிருச்சே
அத்தி பழ உடல் மட்டும்
உழைச்சிடுச்சே
அத்தை மகளுக்கு
பித்து பிடிச்சுடுச்சே
பிடிச்சிருக்கு பிடிச்சிருக்கு
உன்னை பிடிச்சிருக்கு ஒஹோ

காதல் வெட்டுக்கிளி
கண்ணை கடிச்சிருச்சோ
கன்னம் குழியினில்
துள்ளி குதிச்சிருச்சோ

காதல் வெட்டுக்கிளி
கண்ணை கடிச்சிருச்சோ
கன்னம் குழியினில்
துள்ளி குதிச்சிருச்சோ

நீ ராஜாங்கம்
நான் போர் தொடுப்பேன்
ஓ ஹையையோ
நீ மெய் பொய்யோ

அந்த வெத்தலையின் கொடியிலே
பச்சை கிளிகள்
நம்மை திக்கி திக்கி
பேசுதே ஏனடியோ

அந்த ஆலமர குடிசையில்
பூங்குயில்கள்
நம்ம பேரை சொல்லி
அழைப்பது ஏனடியோ

இந்த கதையினை
யாரிடம் சொல்வதுவோ
பச்சை கூரை தோளை பத்தி
எரிகிறதே

காதல் வெட்டுக்கிளி
கண்ணை கடிச்சிருச்சே ஓஹோ
கன்னம் குழியினில்
துள்ளி குதிச்சிருச்சே
காதல் வெட்டுக்கிளி
கண்ணை கடிச்சிருச்சே ஹே
அத்தை மகளுக்கு
பித்து பிடிச்சுடுச்சே


நீ மூன்றாம் பால்
நான் கை குழந்தை
நீ தீபம் தான்
நான் திரியாவேன்

அந்த உலகத்து அழகிகள்
புத்தகம்
அந்த அட்டை படத்தினில்
உன் முகம்

எந்தன் இருபது நகங்களை
பார்கிறேன்
அதில் தெரிவது
அழகிய உன் முகங்கள்

நாம் கடற்கரை
மணலில் நடக்கிறோம்
காதல் அலை காலை தொட்டு
நனைக்கிறதே

காதல் வெட்டுக்கிளி
கண்ணை கடிச்சிருச்சே
கன்னம் குழியினில்
துள்ளி குதிச்சிருச்சே

காதல் வெட்டுக்கிளி
கண்ணை கடிச்சிருச்சே
கன்னம் குழியினில்
துள்ளி குதிச்சிருச்சே

இதழ்கள் கடந்தே
இதயம் வழியே
இடையை தொடுதே

குழந்தையின் தேகம் பார்த்து
சிற்பியானேன்
காகித தேகம் பார்த்து
கவிஞன் ஆனேன்
தூங்கிய அழகை பார்த்து
ஓவியன் ஆனேன்
என்னை நீயும் தொட்டவுடன்
என்ன ஆனேன்

பிடிச்சிருக்கு பிடிச்சிருக்கு
உன்னை பிடிச்சிருக்கு ஒஹோ