Kadhaluku Raja |
---|
காதலுக்கு ராஜா
சிரிக்கும் ரோஜா வா வா
சந்தனத்து ராணி
சிலிர்க்கும் மேனி வா வா
நேரம் நல்ல நேரம்
தென்றலோடு நீ பாடு
ஹே காலம் நல்ல காலம்
கைகள் கோர்த்து நீ ஆடு
ஹே ஹே ஹே
காதலுக்கு ராஜா
சிரிக்கும் ரோஜா வா வா
சந்தனத்து ராணி
சிலிர்க்கும் மேனி வா வா
அந்தரத்தில் சிறந்த பந்தல் இட்டு
அங்கு சென்று அரங்கம் கட்டவா
மந்திரத்தில் என் அன்பு தந்திரத்தில்
வந்து வந்து அணைத்துக் கொள்ளவா ஹே
அந்தரத்தில் சிறந்த பந்தல் இட்டு
அங்கு சென்று அரங்கம் கட்டவா
மந்திரத்தில் என் அன்பு தந்திரத்தில்
வந்து வந்து அணைத்துக் கொள்ளவா
மண் மீது கட்டும் கோட்டை
மறைந்து போகும் கண்ணா
வீண் ஆசை தேவையா
விண் மீது கோட்டை கட்டும்
உன் ஆசை மனக் கோட்டை
பொய் வார்த்தை ஏனையா
உன் ஜாடைப் பார்வை கொஞ்சம் காட்டு
உலகம் எந்தன் காலிலே
காதலுக்கு ராஜா
சிரிக்கும் ரோஜா வா வா
சந்தனத்து ராணி
சிலிர்க்கும் மேனி வா வா
நேரம் நல்ல நேரம்
தென்றலோடு நீ பாடு
ஹே காலம் நல்ல காலம்
கைகள் கோர்த்து நீ ஆடு
ஹே ஹே ஹே
காதலுக்கு ராஜா
சிரிக்கும் ரோஜா வா வா
தத்தை ஒன்று
மயக்கும் மெத்தை இட்டு
வித்தை ஒன்றை படிக்கும் எண்ணமா
கட்டிக் கொள்ள துரத்தி தொட்டுத் தொட்டு
தொட்டில் கட்ட துடிக்கும் மன்மதா ஹேய்
தத்தை ஒன்று
மயக்கும் மெத்தை இட்டு
வித்தை ஒன்றை படிக்கும் எண்ணமா
கட்டிக் கொள்ள துரத்தி தொட்டுத் தொட்டு
தொட்டில் கட்ட துடிக்கும் மன்மதா
உள்ளூறும் காதல் தீயை
நீ மூட்டிவிட்டு பார்த்து
செய்யாதே வேடிக்கை
சொல்லாமல் போடு பாயை
மயக்கும் உந்தன் மாயை
உன் காதல் வாடிக்கை
உன் வேண்டுகோளை ஏற்றுக் கொள்ள
கால நேரம் சேரட்டும்
காதலுக்கு ராஜா
சிரிக்கும் ரோஜா வா வா
சந்தனத்து ராணி
சிலிர்க்கும் மேனி வா வா
நேரம் நல்ல நேரம்
ஹா ஹா ஹா
தென்றலோடு நீ பாடு
ஹே காலம் நல்ல காலம்
ஹேய் ஹேய்
கைகள் கோர்த்து நீ ஆடு ஹேய்
காதலுக்கு ராஜா
சிரிக்கும் ரோஜா வா வா
சந்தனத்து ராணி
சிலிர்க்கும் மேனி வா வா