Kai Veesum Thamarai

Kai Veesum Thamarai Song Lyrics In English


கை வீசும் தாமரை கல்யாண தேவதை
பொன்வாழ்வு கண்டாள் கண்மூடி நின்றாள்
காதல் கொண்டாள்

கை வீசும் தாமரை கல்யாண தேவதை
பொன்வாழ்வு கண்டாள் கண்மூடி நின்றாள்
காதல் கொண்டாள்

கை வீசும் தாமரை கல்யாண தேவதை

பூ ஒன்று இப்போது செண்டானது
நீ தீண்ட பேரின்பம் உண்டானது
பொன்வண்டு தேன் கேட்டு மன்றாடுது
நான் உண்ணும் தேன் இன்னும் சிந்தாதது

என் சேலையில் வான் மின்னல்தான்
வந்து நூலாகுமே
என் சோலையில் வேர் கூட பூ பூக்கும்
ஓர் காலமே
சந்தோஷம் தாலாட்டுமேஏ

கை வீசும் தாமரை கல்யாண தேவதை
பொன்வாழ்வு கண்டாள் கண்மூடி நின்றாள்
காதல் கொண்டாள்

கை வீசும் தாமரை
கல்யாண தேவதை


என் சாலை வழியாக தேர் வந்தது
பெண் என்று இப்போது பேர் கொண்டது
பேரன்பு இதன் முன்பு யார் கண்டது
என் கண்கள் இப்போது நீர் கொண்டது

உன் வார்த்தையே பெயர் இன்னும் வைக்காத
புது ராகமா
உன் கண்களே என் வாழ்வில் ஒளி காட்டும்
பொன் தீபமா
ஏன் இன்னும் சந்தேகமாஆ

கை வீசும் தாமரை கல்யாண தேவதை
பொன்வாழ்வு கண்டாள் கண்மூடி நின்றாள்
காதல் கொண்டாள்

கை வீசும் தாமரை
ஆஹா
கல்யாண தேவதை
அஹ ஹா