Kaiveesum Male

Kaiveesum Male Song Lyrics In English


கை வீசும் காற்றே எங்கிருந்தாய்
ஏதோ நீ சொல்ல ஏங்குகிறாய்
நீ பாதி முடிந்த பாடல்
உன் கண்ணில் என்ன தேடல்
இரவானா வெயில் நீயா
சருகான வாசம் நீயே
அழகேஆஅஆஆஅ

கை வீசும் காற்றே எங்கிருந்தாய்
ஏதோ நீ சொல்ல ஏங்குகிறாய்

காற்றலையா நினைவலையா
நீ என்பது யாரது
கண் சிமிட்டும் நட்சத்திரம்
கண் கலங்கி மின்னுது

சின்ன சின்ன வெண்ணிலா
சிதறி போன மின்னலா
சோகம் கண்ணிலா
நீயும் இந்த மண்ணிலா
நின்று போன தென்றலா
காயம் நெஞ்சில

கை வீசும் காற்றே எங்கிருந்தாய்
ஏதோ நீ சொல்ல ஏங்குகிறாய்


வார்த்தை இல்லா கவிதை உன்னை
யார் கிழித்து போட்டது
வந்தது ஏன் பார்த்தது ஏன்
என் இதயம் கேட்டது

என்ன சொல்ல எண்ணுதோ
தந்தை தாயி தேடுதோ
வழிகள் கூடுதோ
வாசம் தொலைத்த முல்லையோ
வாழ்க்கை உனக்கு இல்லையா
தெய்வம் இல்லையா

கை வீசும் காற்றே எங்கிருந்தாய்
ஏதோ நீ சொல்ல ஏங்குகிறாய்
நீ பாதி முடிந்த பாடல்
உன் கண்ணில் என்ன தேடல்
இரவானா வெயில் நீயா
சருகான வாசம் நீயே
அழகேஆஅஆஆஅ