Kalaimagal Alaimagal Malaimagal

Kalaimagal Alaimagal Malaimagal Song Lyrics In English


கலைமகள் அலைமகள் மலைமகள் மூவரும் குலவிடும் ராத்திரி நவராத்திரி எந்தன் தலைவனை அழகிய இளைஞனை முதன்முதல் தரிசித்த ராத்திரி நவராத்திரி சுப ராத்திரி

ஒருமகள் அழகிய திருமகள் என இவன் தரிசித்த ராத்திரி நவராத்திரி அவள் விலைமகள் இல்லை ஒரு குலமகள் என் இவன் அறிந்த நல் ராத்திரி முதல் ராத்திரி நடு ராத்திரி சுபராத்திரி

கலைமகள் அலைமகள் மலைமகள் மூவரும் குலவிடும் ராத்திரி நவராத்திரி

பெண்ணாகப் பிறந்தது ஒரு ராத்திரி நான் பூவாக மலர்ந்தது ஒரு ராத்திரி பெண்ணாகப் பிறந்தது ஒரு ராத்திரி நான் பூவாக மலர்ந்தது ஒரு ராத்திரி கல்யாண வைபோகம் ஒரு ராத்திரி காத்துக் கிடந்தேனே சுகம் காணப் பல ராத்திரி

நாள்தோறும் நான் கண்டேன் சிவராத்திரி எந்த நங்கைக்கும் நான் சொந்தம் சில ராத்திரி நாள்தோறும் நான் கண்டேன் சிவராத்திரி எந்த நங்கைக்கும் நான் சொந்தம் சில ராத்திரி பாவங்கள் பல செய்தேன் பகல் ராத்திரி அதன் பலன் கண்டேன் உனக் கண்ட முதல் ராத்திரி நவ ராத்திரி இன்று நவ ராத்திரி

கலைமகள் அலைமகள் மலைமகள் மூவரும் குலவிடும் ராத்திரி நவராத்திரி


அன்பே நீ நலமாகி வரும் ராத்திரி என் ஆசைகள் அர்த்தங்கள் பெறும் ராத்திரி அதுதானே என் வாழ்வில் புது ராத்திரி அதைக் காணாமல் எனக்கிங்கு எது ராத்திரி

எனக்காக வரம் கேட்டு முழு ராத்திரி கண்கள் இமைக்காமல் நீ வேண்டித் தொழும் ராத்திரி என் தீங்கை நான் எண்ணி அழும் ராத்திரி கண்ணீர் ஆறாக என் கண்ணில் எழும் ராத்திரி நவ ராத்திரி இன்று நவ ராத்திரி

கலைமகள் அலைமகள் மலைமகள் மூவரும் குலவிடும் ராத்திரி நவராத்திரி