Kalaiye Un Ezhil Meni |
---|
கலையே உன் எழில் மேனி கனியாவதேன்
காதல் கணநேரம் பிரிந்தாலும்
கனல் ஆவதேன்
கலையே உன் எழில் மேனி கலையாவதேன்
காதல் கணநேரம் பிரிந்தாலும்
கனல் ஆவதேன்
கலையே உன் எழில் மேனி கனியாவதேன்
உறவாடும் இவ்வேளை பிரிவென்பதேன்
நம் உயிரோடு உயிர் சேர்ந்து
பெறும் இன்பத்தேன்
உறவாடும் இவ்வேளை பிரிவென்பதேன்
நம் உயிரோடு உயிர் சேர்ந்து
பெறும் இன்பத்தேன்
இரு வேறு பொருள் கூறும்
கண்பார்வை ஏன்
இரு வேறு பொருள் கூறும்
கண்பார்வை ஏன்
ஒன்று நோய் தந்ததேன்
ஒன்று மருந்தானதேன்
பருவத்தின் ஒரு பார்வை
நோயாகுமே எழில்
உருவத்தின் துணை சேர
மருந்தாகுமே
சிரிக்கின்ற இதழ் கூட
கலை பேசுதே
வாய் மணக்கின்ற மொழியாவும்
கவி பாடுதே
கலையே உன் எழில் மேனி கனியாவதேன்
காதல் கணநேரம் பிரிந்தாலும்
கனல் ஆவதேன்
நினைக்கின்ற நினைவுங்கள்
நினைவானதே அதில்
பிறக்கின்ற நாணம் கலையானதே
நினைக்கின்ற நினைவுங்கள்
நினைவானதே அதில்
பிறக்கின்ற நாணம் கலையானதே
எழில் அன்னமே எங்கும்
உன் வண்ணமே
கலை மன்னவா எந்தன்
உயிர் அல்லவா
எழில் அன்னமே எங்கும்
உன் வண்ணமே
கலை மன்னவா எந்தன்
உயிர் அல்லவா
இருவர் : கணம் கூடப்பிரியாமல் உறவாடுவோம்
நம் மனம் நாடும் சுகம் யாவும்
தினம் காணுவோம்
கணம் கூடப்பிரியாமல் உறவாடுவோம்