Kallaalae Senju Vecha Male

Kallaalae Senju Vecha Male Song Lyrics In English


கல்லாலே செஞ்சு வச்ச சாமி இல்லை நீ
கற்பூர தீபம் காட்டும் தெய்வம் இல்லை நீ
கல்லாலே செஞ்சு வச்ச சாமி இல்லை நீ
கற்பூர தீபம் காட்டும் தெய்வம் இல்லை நீ

எனக்காக மண்ணில் வந்த
எனக்காக இந்த மண்ணில் வந்த
என் தங்கமே வைரமே செல்லமே

கல்லாலே செஞ்சு வச்ச சாமி இல்லை நீ
கற்பூர தீபம் காட்டும் தெய்வம் இல்லை நீ

கன்னுக்குட்டி நீ துள்ளி ஓடினா
கண்ணுப்பட்டுடும் சொன்ன சொல்ல கேளம்மா
தேரு வந்து நின்னாக்கூட நீ அழகு
மின்னல் வந்து போனாக்கூட நீதான் அழகு

அம்மான்னு உன்ன நானும்
கூப்பிடுவேன்
எங்கம்மாவ அப்போ அப்போ
நெனச்சுக்குவேன்
நீ செய்கூலி சேதாரம் இல்லாத
என் தங்கமே வைரமே செல்லமே

கல்லாலே செஞ்சு வச்ச சாமி இல்லை நீ
கற்பூர தீபம் காட்டும் தெய்வம் இல்லை நீ


மண்ணில் விழுந்த மழைத்துளி நீ
என் கண்ணில் இருக்கும் கருவிழி நீ
பொட்டு வச்ச சித்திரமே நீ எனக்கு போதும்
வட்ட நிலா நீதான் என்று உன் அழக பாடும்

யானை மேல நீ அமர்ந்து
வலம் வரணும்
நான் எப்போ எப்போ கேட்டாலும்
நீ வரம் தரணும்
நீ வேணும் நிழலாக வாழ்வோடும்
என் தங்கமே வைரமே செல்லமே

கல்லாலே செஞ்சு வச்ச சாமி இல்லை நீ
கற்பூர தீபம் காட்டும் தெய்வம் இல்லை நீ
கல்லாலே செஞ்சு வச்ச சாமி இல்லை நீ
கற்பூர தீபம் காட்டும் தெய்வம் இல்லை நீ

எனக்காக மண்ணில் வந்த
எனக்காக இந்த மண்ணில் வந்த
என் தங்கமே வைரமே செல்லமே

ஆராரோ ஆரீராரோ ஆரிராரீரோ
ஆராரோ ஆரீராரோ ஆரிராரீரோ
ஆராரோ ஆரீராரோ ஆரிராரீரோ
ம்ம்ம்ம்ம்ம்ம்ஹ்ம்ம்ம்ம்ம்ம்ம்