Kallile Kalai Vannam

Kallile Kalai Vannam Song Lyrics In English


கல்லிலே கலைவண்ணம் கண்டான்
கல்லிலே கலைவண்ணம் கண்டான்
இரு கண் பார்வை மறைந்தாலும்
காணும் வகை தந்தான்

கல்லிலே கலைவண்ணம் கண்டான்
கல்லிலே கலைவண்ணம் கண்டான்
இரு கண் பார்வை மறைந்தாலும்
காணும் வகை தந்தான்
கல்லிலே கலைவண்ணம் கண்டான்

பல்லவர் கோன் கண்ட மல்லைப் போல
பாரெங்கும் தேடினும் ஊரொன்றும் இல்லை
கல்லிலே கலைவண்ணம் கண்டான்

பெண்ணொன்று ஆணொன்று செய்தான்
அவர் பேச்சையும் மூச்சையும்
பார்வையில் வைத்தான்
பெண்ணொன்று ஆணொன்று செய்தான்
அவர் பேச்சையும் மூச்சையும்
பார்வையில் வைத்தான்

கண்ணான இடம் தேடி வந்தோம்
கண்ணான இடம் தேடி வந்தோம்
என் கண்ணோடு கண்ணே
உன் கண் வைத்து பார்ப்பாய்

கல்லிலே கலைவண்ணம் கண்டான்
கல்லிலே கலைவண்ணம் கண்டான்
இரு கண் பார்வை மறைந்தாலும்
காணும் வகை தந்தான்
கல்லிலே கலைவண்ணம் கண்டான் – 2

பருவத்தில் இள மேனி பொங்க
ஒரு பக்கத்தில் இன்னிசை மேளங்கள் முழங்க
பருவத்தில் இள மேனி பொங்க
ஒரு பக்கத்தில் இன்னிசை மேளங்கள் முழங்க


அரங்கேறி நடமாடும் மங்கை
அரங்கேறி நடமாடும் மங்கை போல
அன்பே என் இதயத்தில் நீ ஆடுகின்றாய்

கல்லிலே கலைவண்ணம் கண்டான்

உடலாலும் மனதாலும் உன்னை
என் உயிராக சேர்த்து நான் வாழ்கிறேன் கண்ணே
உடலாலும் மனதாலும் உன்னை
என் உயிராக சேர்த்து நான் வாழ்கிறேன் கண்ணே

கடல் வற்றி போனாலும் போகும்
கடல் வற்றி போனாலும் போகும்
கொண்ட கடமையும் ஆசையும்
மாறாது நாளும்

கல்லிலே கலைவண்ணம் கண்டான்
கல்லிலே கலைவண்ணம் கண்டான்
இரு கண் பார்வை மறைந்தாலும்
காணும் வகை தந்தான்
கல்லிலே கலைவண்ணம் கண்டான்