Kalyana Ponnu

Kalyana Ponnu Song Lyrics In English


ஹேய் கல்யாண பொண்ணு பூமியில ஒன்னு கல்யாண பொண்ணு பூமியில ஒன்னு அழகெல்லாம் மொத்தம் இருக்கு அணையாத குத்துவிளக்கு பொன்னூஞ்சல் பூமாலை பட்டாடை கொண்டாடும்

கல்யாண புள்ள பூமியெங்கும் இல்ல கல்யாண புள்ள பூமியெங்கும் இல்ல முன்னால வச்சக் கால எடுக்காத மச்சக்காள பொன்னூஞ்சல் பூமாலை பட்டாடை கொண்டாடும்

கல்யாண பொண்ணு ஹேய் பூமியில ஒன்னு அட கல்யாண புள்ள பூமியெங்கும் இல்ல

தங்கச் சிலைதான் எங்க தங்கச்சியும்தான் வெறும் தென்னம் பிள்ள கீரிப்பிள்ள உங்க புள்ளத்தான் கண்ணுக்கழகா எங்க வண்ணக் குமரன் அட சிங்கப்பல்லு சப்ப மூக்கு உங்கப் பொண்ணுதான்

உன்னப் போல ஜாடை உங்க மாப்பிள்ள அண்ணன் மூஞ்சிப் பாத்தா தங்க தேவல வம்பு வழக்கெதுக்கு மொத்தத்துல உனக்கு புத்தி கொஞ்சம் கிறுக்கு போம்மா

கல்யாண புள்ள ஹோய் பூமியெங்கும் இல்ல அழகெல்லாம் மொத்தம் இருக்கு அணையாத குத்துவிளக்கு பொன்னூஞ்சல் பூமாலை பட்டாடை கொண்டாடும் கல்யாண பொண்ணு ஹேய் பூமியில ஒன்னு


கெட்டிக்காரன்தான் தொடத் தட்டும் வீரன்தான் அட சொல்லப் போனா எங்கப் புள்ள சூரப்புலிதான் ஹேய் நல்ல குடும்பம் ரோஷமுள்ள குடும்பம் புள்ளி மானப் போல மானம் காக்கும் எங்க குடும்பம்

சத்தம் போட்டு நீதான் ரொம்ப கூவுறே சும்மா நீயும் ஏம்மா துள்ளித் தாவுறே ஒன்னுக்கொண்ணு துணையா ஒண்ணுக்குள்ள இணையா ஒத்துப் போனா சரிதான் போய்யா

கல்யாண பொண்ணு ஹேய் பூமியில ஒன்னு கல்யாண புள்ள பூமியெங்கும் இல்ல முன்னால வச்சக் கால எடுக்காத மச்சக்காள பொன்னூஞ்சல் பூமாலை பட்டாடை கொண்டாடும்

கல்யாண புள்ள பூமியெங்கும் இல்ல கல்யாண புள்ள பூமியெங்கும் இல்லஹே ஹெஹ்ஹ