Kalyana Ponnu Evalam

Kalyana Ponnu Evalam Song Lyrics In English


பாடகர்கள் : மலேசியா வாசுதேவன் மற்றும் வாணி ஜெய்ராம்

பாடலாசிரியர் : வாலி



கல்யாண பொண்ணு ஏவாளாம் மாப்பிள்ளை பேரு ஆதாமாம் கோவேறு கழுதை மேலேறி அழகா ஊர்கோலம் போறாங்களாம்

கல்யாண பொண்ணு ஏவாளாம் மாப்பிள்ளை பேரு ஆதாமாம் கோவேறு கழுதை மேலேறி அழகா ஊர்கோலம் போறாங்களாம்ஆஹான்

அஞ்சாறு குயிலுங்க சங்கீதம் படிக்க இந்திர லோகத்து சுந்தரி மாதிரி அங்கொரு மயிலு நடிக்க காடானது சொர்க்க வீடானது

மூக்காலே மரங்கொத்தி கைத்தாளம் இசைக்க முன்னையும் பின்னையும் தத்தி குதிச்சு கொஞ்சுற கிளிகள் ரசிக்க சோலைவனம் எங்கும் கோலாகலம்


கோடை மழைமேகம் கொட்டும் மண மேளம் கோடை மழைமேகம் கொட்டும் மண மேளம் கமுக மரம் பாக்கெடுத்து காத்து வந்தே வீசும்

கல்யாண பொண்ணு ஹான் ஏவாளாம் மாப்பிள்ளை பேரு ஹான் ஆதாமாம் கோவேறு கழுதை மேலேறி அழகா ஊர்கோலம் போறாங்களாம்



கல்யாண சீதனம் காடெல்லாம் கெடக்கு மங்கல பொண்ணுக்கு குங்கும சந்தனம் மசக்க கிசக்க வந்தாக்க மாங்காய் உண்டு தின்ன தேங்காய் உண்டு

தேனுண்டு தினையுண்டு தெம்பாக இருக்க வாலிபம் வளர வீரியம் விளங்க மூலிகை இருக்கு ராசாத்தி இல்லாமதான் இங்கு இல்லாதது பட்டினி இங்கே ஏது பஞ்சம் இங்கே ஏது பட்டினி இங்கே ஏது பஞ்சம் இங்கே ஏது மூங்கிலுக்குள்ளே முத்தெடுத்து மாலை கட்டி போடு

ஹான் கல்யாண பொண்ணு ஹான் ஏவாளாம் மாப்பிள்ளை பேரு ஹான் ஆதாமாம் கோவேறு கழுதை மேலேறி அழகா ஊர்கோலம் போறாங்களாம்