Kanaa Kaangiren

Kanaa Kaangiren Song Lyrics In English


ஆஅ ஆஅஅஆஅ
ஆஆஆஆஆ
சநிசநி கமகம பத நிசநிசபநிநி

சச ச நிதநிப
சச ச நிதநிப
மபநி மப மபநிகரி சம
மபநி மப மபநிகரி சம ச
மபநி மப மபநிகரி சம ச

கனா காண்கிறேன்
கனா காண்கிறேன்
கண்ணாளனே
ஒரே பந்தலில்
ஒரே மேடையில்
இருவருமே

கனா காண்கிறேன்
கனா காண்கிறேன்
கண்ணாளனே
ஒரே பந்தலில்
ஒரே மேடையில்
இருவருமே

மண்ணை தொட்டாடும்
சேலை சேலை கொண்டு
மார்பை தொட்டாடும்
தாலி தாலி கொண்டு
மடியை தொட்டாடும்
மாலை மாலை கொண்டு மகிழ்வேன்

தினம் தினமும்
வாசம் கொண்டாடும்
பூக்கள் பூக்கள் வைத்து
வாசல் கொள்ளாத
கோலம் கோலமிட்டு
காதல் கொண்டாடும்
கணவன் திருமடியில் மலர்வேன்

சச ச நிதநிப
சச ச நிதநிப
மபநி மப மபநிகரி சம
மபநி மப மபநிகரி சம ச
மபநி மப மபநிகரி ச

கனா காண்கிறேன்
கனா காண்கிறேன்
கண்ணாளனே
ஒரே பந்தலில்
ஒரே மேடையில்
இருவருமே
இருவருமே
இருவருமே
இருவருமே

சச ச நிதநிப
சச ச நிதநிப
மபநி மப மபநிகரி சம
மபநி மப மபநிகரி சம ச

என் தோழிகளும்
உன் தோழர்களும்
அய்யோ நம்மை கேலி செய்ய
என் சேலையும் உன் வேட்டியும் நாணும்
நீ கிள்ளிவிட நான் துள்ளியெழ
ஆகா அது இன்ப துன்பம்
நான் கிள்ளிவிட என் கைவிரல்கள் ஏங்கும்


தஞ்சாவூர் மேளம் கொட்ட
தமிழ்நாடே வாழ்த்து சொல்ல
சிவகாசி வேட்டுச்சத்தம் ஊரை கிழிக்கும்
தென்னாட்டு நெய்யின் வாசம்
செட்டிநாட்டு சமையல் வாசம்
நியூயார்க்கை தாண்டி கூட
மூக்கை துளைக்கும்

சச ச நிதநிப
சச ச நிதநிப
மபநி மப மபநிகரி சம
மபநி மப மபநிகரி சம ச
மபநி மப மபநிகரி ச

கனா காண்கிறேன்
கனா காண்கிறேன்
கண்ணாளனே
ஒரே பந்தலில்
ஒரே மேடையில்
இருவருமே

நம் பள்ளியறை நம் செல்ல அறை
அன்பே அதில் பூக்கள் உண்டு
பூவாடையின்றி வேறாடைகள் இல்லை
ஆண் என்பதும் பெண் என்பதும்
ஹையோ இனி அர்த்தமாகும்
நீ என்பதும் நான் என்பதும் இல்லை

மார்போடு பின்னிக்கொண்டு
மணிமுத்தம் எண்ணிக்கொண்டு
மடியோடு வீடுகட்டி காதல் செய்குவேன்
உடல்கொண்ட ஆசை அல்ல
உயிர்கொண்ட ஆசை எந்தன்
உயிர்போகும் முன்னால்
வாழ்வை வெற்றி கொள்ளுதே

சச ச நிதநிப
சச ச நிதநிப
மபநி மப மபநிகரி சம
மபநி மப மபநிகரி சம ச

கனா காண்கிறேன்
கனா காண்கிறேன்
கண்ணாளனே
ஒரே பந்தலில்
ஒரே மேடையில்
இருவருமே

மண்ணை தொட்டாடும்
சேலை சேலை கொண்டு
மார்பை தொட்டாடும்
தாலி தாலி கொண்டு
மடியை தொட்டாடும்
மாலை மாலை கொண்டு மகிழ்வேன்

தினம் தினமும்
வாசம் கொண்டாடும்
பூக்கள் பூக்கள் வைத்து
வாசல் கொள்ளாத
கோலம் கோலமிட்டு
காதல் கொண்டாடும்
கணவன் திருமடியில் மலர்வேன்