Kanavilae Kanavilae

Kanavilae Kanavilae Song Lyrics In English




கனவிலே கனவிலே
பல நாள் கண்டது எதிரிலே
எதிரிலே அழகாய் வந்தது
எதுவும் பேசாமலே உரைத்தேன்
என் காதலை விழிகள் மூடாமலே
ரசிப்பேன் பெண் சாரலை அவள்
என் வாசமே என் சந்ததியாய்
எட்டு திசைகளும் அதிருமே



சிறு புன்னகையில்
என்னை வென்றுவிடும்
அவள் தென்றலே இரு
கண்களையும் எழில்
செய்துவிடும் அவள்
மின்னலே

காலை மாலை
யாவுமே காதல் கொள்ள
வேணுமே தினம் பேசி
போகிற ஜாடைகள் பல
நூறு கவி சொல்லுதே

இரவே பகலே
இரவாய் தோன்றிடு
இரவே இரவே பகலை
நீங்கிடு மூச்சுக் குழலிலே
மோகம் விரியுதே கூச்சம்
தொலையவே தேகம் சரியுதே

கனவிலே கனவிலே
பல நாள் கண்டது எதிரிலே
எதிரிலே அழகாய் வந்தது


உடை தொட்ட இடம்
விரல் தொட்டு விட உயிர்
கெஞ்சுமே அடைபட்ட நதி
உடைபட்டுவிட அலை
பொங்குமே

வாசம் வீசும் பூவிலே
நாளும் உந்தன் வாசனை
மிதமான சூரிய தீபமாய்
இமை நான்கு மொழி
சொன்னதே

எது நீ எது நான்
இனிமேல் தேடுவோம்
நதி நீ கரை நான் கலந்தே
ஓடுவோம்
பூக்கள் முழுவதும்
தீண்டும் விழியிலே கூட்டம்
நடத்துமே தோற்கும் அழகிலே

கனவிலே கனவிலே
பல நாள் கண்டது எதிரிலே
எதிரிலே அழகாய் வந்தது
எதுவும் பேசாமலே உரைத்தேன்
என் காதலை விழிகள் மூடாமலே
ரசிப்பேன் பெண் சாரலை அவள்
என் வாசமே என் சந்ததியாய்
எட்டு திசைகளும் அதிருமே

விஷ்லிங் :