Kanmaniye |
---|
உன்னோட வார்த்தைகள்
ஒவ்வொன்றை கோர்த்திடும்
பாக்கியம் வேண்டுமே எனக்குஎனக்கு
அன்பே உன் மேல் பித்தனாகுறேன்
என்னோட வாழ்க்கையில் ஒவ்வொரு நாளுமே
உன்னோடு வார்த்தையில் இருக்குஇருக்கு
அன்பே உன்னால் புத்தனாகுறேன்
பொல்லாதடி பொல்லாதடி
சின்ன சின்ன புன்னகை
உள்ளம் கண்டபடி துள்ளுதடி
நீ கொஞ்சி கொஞ்சி பார்க்கையில்
கண்டுபிடி கண்டிபிடி
முதலே முடிவே நீயென்று
கொல்லாதடி கொல்லாதடி
பாவம் பொடியன் நான்
கார்குழல் அருவியில் நனைந்திடும் வரம்
காதலில் கவலைகள் கரைந்திடும் தினம்
தேடுதே கவிதைகள் அவளிதல் மனம்
தீருதே தமிழினில் அழகியல் பதம்
அன்பே அன்றே அங்கே
என்னை கொல்லை கொண்டு போனாயோ நீ
கண்ணை மூடி உன்னை கண்டால்
முன்னே வந்து நின்றதானடி
கண்மணியே
கண்மணியே
கண்மணியே
கண்மணியே
இவள் இதழ் இதம் என
இலக்கியம் பாடியதோ
அவள் முதல் நடுவினில்
அணிகலன் ஆகியதோ
காதல் மழையில் இணையும் இதயம்
இளகும் பணிக்கூல் ஆகியதோ
நாளும் உனையே சுழலும் நிலவாய் மனதும்
துணைக்கோள் ஆகிதோ
ஹே பெண்ணே நானும் உன்னை கண்ட போதிலே
வானூர்தியாக மாறி நானும் விண்ணிலே
உன் சிந்தனையை ஏந்தி கொண்டு நெஞ்சிலே
நீ தந்த பார்வை ஒன்றை பொத்தி வைத்தேன் என்னிலே
உன் மன ஓட்டத்தை பந்தயம் வைக்கிற
தந்திரகாரியும் நீதானோ
மின்சார வேகத்தில் பெண்சாரம் பாய்ச்சிய
மந்திர பார்வையும் நீதானோ
அகம் அதில் தினம் இவள்
திரை கடல் ஆனாளோ
முகம் மலர் கணம் அதில்
திரவிய தேனாளோ
அகம் அதில் தினம் இவள்
திரை கடல் ஆனாளோ
முகம் மலர் கணம் அதில்
திரவிய தேனாளோ
பூந்தளிரே
கார்குழல் அருவியில் நனைத்திடும் வரம்
காதலில் கவலைகள் கரைந்திடும் தினம்
தேடுதே கவிதைகள் அவளிதழ் மனம்
தீருதே தமிழினில் அழகியல் பதம்
அன்பே அன்றே அங்கே
என்னை கொல்லை கொண்டு போனாயோ நீ
கண்ணை மூடி உன்னை கண்டால்
முன்னே வந்து நின்றதானடி
கண்மணியே
கண்மணியே
கண்மணியே
கண்மணியே