Kannizhantha Pillaikku

Kannizhantha Pillaikku Song Lyrics In English


கண்ணிழந்த பிள்ளைக்கு
தெய்வம் தந்த தரிசனம்
அன்பு மிக்க ஒரு மனம்
நல்லவருக்கு ஒரு குணம்

கண்ணிழந்த பிள்ளைக்கு
தெய்வம் தந்த தரிசனம்
அன்பு மிக்க ஒரு மனம்
நல்லவருக்கு ஒரு குணம்

கண்ணிழந்த பிள்ளைக்கு
தெய்வம் தந்த தரிசனம்

தாயின் குரல் கேட்டதுண்டு
தந்தை முகம் பார்த்ததுண்டு
ஜீவனற்ற கண்களுக்கு
தேவன் முகம் தெரிகின்றது

அந்த மர கிளைதனிலே
வந்தமர்ந்த பறவை ஒன்று
அந்த மர கிளைதனிலே
வந்தமர்ந்த பறவை ஒன்று
தந்ததொரு அன்பு கண்டு
தந்தை தன்ன மறந்ததுண்டு

கண்ணிழந்த பிள்ளைக்கு
தெய்வம் தந்த தரிசனம்
அன்பு மிக்க ஒரு மனம்
நல்லவருக்கு ஒரு குணம்

கண்ணிழந்த பிள்ளைக்கு
தெய்வம் தந்த தரிசனம்

ஏற்றிவிட்ட ஏணி ஒன்று
நின்றபடி நிற்கிறது
ஏறி விட்ட ஒரு மனமோ
வேறு வழி நடக்கிறது


ஏற்றியதும் குற்றமில்லை
ஏணியிலும் பாவமில்லை
ஏற்றியதும் குற்றமில்லை
ஏணியிலும் பாவமில்லை
மாற்றியது கடவுள் என்னும்
மாயக்காரன் லீலையம்மா

கண்ணிழந்த பிள்ளைக்கு
தெய்வம் தந்த தரிசனம்

தேவனவன் கோவிலிலே
கோடை வெயில் சுடுகிறது
தேவை அவள் வாசலிலோ
செல்வா மழை பொழிகிறது

நல்லவர்க்கு பொருள் எதற்கு
நாடி வரும் புகழ் எதற்கு
நல்லவர்க்கு பொருள் எதற்கு
நாடி வரும் புகழ் எதற்கு
உன்னுடைய வசந்தத்திலே
ஒன்றும் இல்லை ரசிப்பதற்கு

கண்ணிழந்த பிள்ளைக்கு
தெய்வம் தந்த தரிசனம்
அன்பு மிக்க ஒரு மனம்
நல்லவருக்கு ஒரு குணம்

கண்ணிழந்த பிள்ளைக்கு
தெய்வம் தந்த தரிசனம்