Kannumilla Kadhumilla

Kannumilla Kadhumilla Song Lyrics In English


இசை அமைப்பாளர் : சங்கர் கணேஷ்

கண்ணுமில்ல காதுமில்ல
கையுமில்ல காலுமில்ல
நேற்று வரையினிலே

கண்ணும் உண்டு காதும் உண்டு
கையும் உண்டு காலும் உண்டு
இன்று வாழ்க்கையிலே

ஒரு தேவன் இங்கே பிறந்தான்
எங்கள் கண்ணை அவன்தான் திறந்தான்

கண்ணும் உண்டு காதும் உண்டு
கையும் உண்டு காலும் உண்டு
இன்று வாழ்க்கையிலே

குகனுக்கு பன்னிரு கண்ணு
அப்பன் சிவனுக்கு இரண்டது ஒண்ணு
ஏழைக்கு வாய்த்தது இரண்டு அந்த
இரண்டுமே போனது இருண்டு

சாபத்தை பாவத்தை
ஜானகி நாயகன் மாற்றி வைத்தான்
கண்ணொளி போலவே
கல்வியின் தீபத்தை ஏற்றி வைத்தான்

எங்கள் தெய்வம் இங்கே யாரு
நெஞ்சில் வாழும் எம்ஜிஆரு

எங்கள் தெய்வம் இங்கே யாரு
நெஞ்சில் வாழும் எம்ஜிஆரு

அனைவரும் : கண்ணும் உண்டு காதும் உண்டு
கையும் உண்டு காலும் உண்டு
இன்று வாழ்க்கையிலே
லாலாலாலா

ஊனங்கள் ஏழையை வறுத்த
அந்த உறுப்புகள் செயற்கையில் பொருத்த
ஆணைகள் போட்டவன் நெஞ்சம்
பெற்ற அன்னையின் அன்பையும் மிஞ்சும்

செவிடர்கள் கேட்டிட
காதொலி கருவிகள் கொடுத்தவனாம்
பிள்ளைகள் படித்திட
சோறுடன் சீருடை அளித்தவனாம்


எங்கள் தெய்வம் இங்கே யாரு
நெஞ்சில் வாழும் எம்ஜிஆரு

எங்கள் தெய்வம் இங்கே யாரு
நெஞ்சில் வாழும் எம்ஜிஆரு

அனைவரும் : கண்ணும் உண்டு காதும் உண்டு
கையும் உண்டு காலும் உண்டு
இன்று வாழ்க்கையிலே

லாலாலாலா

பொன்மனச் செம்மலைக் காட்டும்
எங்கள் ஜானகி அன்னையின் தோற்றம்
தாய் தந்தை பூமியில் எமக்கு
இவர் வடிவத்தில்தான் இங்கு இருக்கு

கோயிலின் தெய்வங்கள்
ஊமைகள் போல் இங்கு இருக்கையிலே
ஊமைகள் பேசிட
உதவிடும் தெய்வங்கள் இவர்களம்மா

எங்கள் தலைவா நாளும் வாழ்க
எங்கள் தாயே நீயும் வாழ்க
எங்கள் தலைவா நாளும் வாழ்க
எங்கள் தாயே நீயும் வாழ்க

கண்ணுமில்ல காதுமில்ல
கையுமில்ல காலுமில்ல
நேற்று வரையினிலே

கண்ணும் உண்டு காதும் உண்டு
கையும் உண்டு காலும் உண்டு
இன்று வாழ்க்கையிலே

அனைவரும் : ஒரு தேவன் இங்கே பிறந்தான்
எங்கள் கண்ணை அவன்தான் திறந்தான்
ஒரு தேவன் இங்கே பிறந்தான்
எங்கள் கண்ணை அவன்தான் திறந்தான்