Kanyakumaree Neeye

Kanyakumaree Neeye Song Lyrics In English


கன்னியாகுமரி நீயே
என்னை கண்ணெடுத்து
பார்க்க வேண்டும் நீயே

கன்னியாகுமரி நீயே
இளம் கன்னியாகுமரி நீயே
என்னை கண்ணெடுத்து
பார்க்க வேண்டும் நீயே
நல்லழகு மங்கை நீயேஏ
நல்ல வார்த்தை சொல்லுவாயேஓஒ

கன்னியாகுமரி நீயே

கால காலமாக ஓடுகின்ற ஆறை
கன்னியாகுமரி என்று சொல்லலாமே
முதுமை இன்றி நாளும்
இளமை கொண்டதாலே
குமரி என்று நாளும் கொள்ளலாமே

மீன் இருக்கும்
சுவை தேன் இருக்கும்
குறுகுறுக்கும் நல்ல
நடை இருக்கும்

கனிவாய் சிரிக்கும்
சுகமாய் அணைக்கும்
நினைத்தால் இனிக்கும்
மனத்தை இழுத்து
மயக்கும் அழகிய

கன்னியாகுமரி நீயே
என்னை கண்ணெடுத்து
பார்க்க வேண்டும் நீயே

வளைய நெளிய பார்த்தேன்
வளையல் ஓசை கேட்டேன்
வலையை வீசிப் பார்க்க ஆசை ஆனேன்


அலையின் ஓசை கேளு
வளையின் ஓசை போலே
வலையை ஆத்தி யாரும் வீசலாமே

அமைதி கொள்ளும்
இது ஆர்ப்பரிக்கும்
அணை என்று சொன்னால்
மறுதலிக்கும்

உறவாய் நினைத்து
கரத்தால் எவனும்
பிடித்தால் விலகும்
ஒருவன் மடியில்
கலக்கும் அழகிய

கன்னியாகுமரி நீயே

கன்னியாகுமரி நீயே
என்னை கண்ணெடுத்து
பார்க்க வேண்டும் நீயே
நல்லழகு மங்கை நீயேஏ
நல்ல வார்த்தை சொல்லுவாயேஓஒ

கன்னியாகுமரி நீயே
என்னை கண்ணெடுத்து
பார்க்க வேண்டும் நீயே