Karudhu Kathaaduthu |
|---|
கருது காத்தாடுது
குருவி கூத்தாடுது
பசும் தோப்பெல்லாம் பூப்பூக்க
ஒன்ன பூவாட்டம் நான் பாக்க
கருது காத்தாடுது
குருவி கூத்தாடுது
பசும் தோப்பெல்லாம் பூப்பூக்க
ஒன்ன பூவாட்டம் நான் பாக்க
வரும் தை மாசம் கல்யாணம்
ராவெல்லாம் கச்சேரி நீ படிக்க
இந்தப் பாலாறும் தேனாறும்
வேறாரும் காணாம நான் குளிக்க
கருது காத்தாடுது
குருவி கூத்தாடுது
பசும் தோப்பெல்லாம் பூப்பூக்க
என்ன பூவாட்டம் நீ பாக்க
மீனே செம்மீனே
உன்ன ஓட தாலாட்ட
பூவே செம்பூவே
பனி வாட பாராட்ட
ஒடம்பு புண்ணாகத்தான்
ஒதடு ஒண்ணாகத்தான்
ஒரசக் கூடாதையா சாமி
ஆச கொண்டலும்தான்
அளவு இல்லாமத்தான்
மழைய தாங்காதையா பூமி
வளை ஆடும் கையோடும்
கிளையாடும் கனியோடும்
விளையாடவா
ஹோ ஒரு பாதி பசியாற
மறு பாதி ருசியேற
பரிமாற வந்தாயோ நீதான்
கருது காத்தாடுது
குருவி கூத்தாடுது
பசும் தோப்பெல்லாம் பூப்பூக்க
ஒன்ன பூவாட்டம் நான் பாக்க
வரும் தை மாசம் கல்யாணம்
ராவெல்லாம் கச்சேரி நீ படிக்க
இந்தப் பாலாறும் தேனாறும்
வேறாரும் காணாம நான் குளிக்க
ஹேய் கருது காத்தாடுது
குருவி கூத்தாடுது
பசும் தோப்பெல்லாம் பூப்பூக்க
ஒன்ன பூவாட்டம் நான் பாக்க
கேட்டா நான் கேட்டா
தர மாட்டே நீயாகத்தான்
தொடணும் கை படணும்
சுகம் மலரும் தானாகத்தான்
இரவில் ஒன்னாட்டம்தான்
எனக்கு திண்டாட்டம்தான்
மனசில் போராட்டம்தான் லேசா ஹாஹா
படுக்கை முள்ளாச்சுது
பாலும் கள்ளாச்சுது
நிலவும் தீயாச்சுது ராசா
இனி மேலும் தாங்காது
இரு கண்ணும் தூங்காது
உறவாட வா
ஹே அது போக மோதாதே
அலையாட்டம் பாயாதே
அம்மாடி என்னாவேன் நான்தான்
கருது காத்தாடுது
குருவி கூத்தாடுது
பசும் தோப்பெல்லாம் பூப்பூக்க
ஒன்ன பூவாட்டம் நான் பாக்க
வரும் தை மாசம் கல்யாணம்
ராவெல்லாம் கச்சேரி நீ படிக்க
இந்தப் பாலாறும் தேனாறும்
வேறாரும் காணாம நான் குளிக்க
கருது காத்தாடுது
குருவி கூத்தாடுது
பசும் தோப்பெல்லாம் பூப்பூக்க
என்ன பூவாட்டம் நீ பாக்க
