Karugumani

Karugumani Song Lyrics In English


கருகமணி கருகமணி
கழுத்துல ஆடுதடி
கனிஞ்ச கனி உரிமை இனி
எனக்குன்னு பாடுதடி

குடுத்து வச்ச ஆள் நானு
அது உனக்கு தெரியாது
வயசில் வரும் கோளாறு
வந்துருச்சு தகராறு
இது யாருக்கான திருநாளு திருநாளு

கருகமணி கருகமணி
கழுத்துல ஆடுதடி
கனிஞ்ச கனி உரிமை இனி
உனக்குன்னு பாடுதய்யா



மாவேடுத்தேன் கோலத்துக்கு
உன் முகம் வரைஞ்சு வச்சேன்
காய் எடுத்தேன் கொழம்பு வைக்க
ரசத்திலே போட்டு புட்டேன்

கோர புல்லு பாய் எடுத்தேன்
உறக்கத்த தொலைச்சுபுட்டேன்
கோழி சத்தம் கேட்கும் முன்னே
ஒன் குரல் கேட்டு புட்டேன்

கிழக்கு தெக்க வடக்கு
எங்கும் தெரியும் உன் ஆசை முகம்

எனக்கு அடி எனக்கு
நீ இருக்கும் திசை கோயில் குளம்

காத்துல கேக்கும் ஓசை
என்ன சொல்லுதோ

கண்மணி நடந்த
கொலுசின் ஓசை கேக்கும் எனக்கு

கருகமணி கருகமணி
கழுத்துல ஆடுதடி
கனிஞ்ச கனி உரிமை இனி
உனக்குன்னு பாடுதய்யா


மூச்சு வரும் ஆழத்துல
உன்ன நான் பதிக்கு வச்சேன்
மூங்கிலிலே காத்து தரும்
இசைபோல் ரசிச்சுகிட்டேன்

வளர்பிறையா முதல் முதலா
எதிர்ல உன்ன பார்த்தேன்
தேய்பிறையா தினம் குறைஞ்சு
உன் நினைப்பில் எளச்சுபுட்டேன்

குழந்தை மனம் இருந்தா
இந்த உலகம் ரொம்ப அழகாகும்

மனசு எழுந்து விழுந்தா
அது காதல் என்னும் கடலாகும்

கோபுரம் மேலே ஏறி
உன்ன பாடவா

மாடத்தில் கூட போட
நானும் கூட வரட்டா

கருகமணி கருகமணி
கழுத்துல ஆடுதடி
கனிஞ்ச கனி உரிமை இனி
உனக்குன்னு பாடுதய்யா

குடுத்து வச்ச ஆள் நானு
அது உனக்கு தெரியாது
வயசு இப்போ பதினாறு
வந்துருச்சு தகராறு
இது யாருக்கான திருநாளு திருநாளு

கருகமணி கருகமணி
கழுத்துல ஆடுதடி
கனிஞ்ச கனி உரிமை இனி
உனக்குன்னு பாடுதய்யா