Keeravani |
---|
ஸா நிஸரி ஸாநி
ஆஹாஆஆ
ஸா நிஸமக மரி
ஹாஆஆஆஆ
பதஸா நிஸரி ஸாநி
ஆஹாஆஆ
ஸாநி ஸ ம க ம ரி
ஹாஆஹாஆஆஆ
பத ஸஸஸநி ரிரிரிஸ
கககரி மமமக பா
ஹாஆஹாஆஆஆ
ஸா நி த ப ம க ரி ஸ நி
கீரவாணி
இரவிலே கனவிலே
பாட வா நீ
இதயமே உருகுதே
அடி ஏனடி சோதனை
தினம் வாலிப வேதனை
தனிமையில் என் கதி என்னடி
சங்கதி சொல்லடி வாணி
கீரவாணி
இரவிலே கனவிலே
பாட வா நீ
இதயமே உருகுதேஏ
ஆஅஆஅஆ
கரிஸ பமக பாநி
சரிக ரிகஸ நீ பா
நீ பார்த்ததால் தானடி
சூடானது மார்கழி
நீ சொன்னதால் தானடி
பூ பூத்தது பூங்கொடி
தவம் புரியாமலே
ஒரு வரம் கேட்கிறாய்
இவள் மடிமீதிலே
ஒரு இடம் கேட்கிறாய்
வருவாய் பெறுவாய் மெதுவாய்
தலைவனை நினைந்ததும்
தலையணை நனைந்ததேன்
அதற்கொரு விடை தருவாய்
கீரவாணி
இரவிலே கனவிலே
பாட வா நீ
இதயமே உருகுதே
அடி ஏனடி சோதனை
தினம் வாலிப வேதனை
தனிமையில் என் கதி என்னடி
சங்கதி சொல்லடி வாணி
கீரவாணி
இரவிலே கனவிலே
பாட வா நீ
இதயமே உருகுதேஏ
புலி வேட்டைக்கு வந்தவன்
குயில் வேட்டைதான் ஆடினேன்
புயல் போலவே வந்தவன்
பூந்தென்றலாய் மாறினேன்
இந்த வனம் எங்கிலும்
ஒரு சுரம் தேடினேன்
இங்கு உனைப் பார்த்ததும்
அதை தினம் பாடினேன்
மலரில் மலராய் மலர்ந்தேன்
பறவைகள் இவளது
உறவுகள் என தினம்
கனவுகள் பல வளர்த்தேன்
கீரவாணி
இரவிலே கனவிலே
பாட வா நீ
இதயமே உருகுதேஏ
அடி ஏனடி சோதனை
தினம் வாலிப வேதனை
தனிமையில் என் கதி என்னடி
சங்கதி சொல்லடி வாணி
கீரவாணி
இரவிலே கனவிலே
பாட வா நீ
இதயமே உருகுதேஏ