Kelappu Kelappu

Kelappu Kelappu Song Lyrics In English


கெளப்பு கெளப்பு கெள கெளப்பு
கெளப்பு கெளப்பு கெள கெளப்பு
கெளப்பு கெளப்பு கெள கெளப்பு
கெளப்பு கெளப்பு கெள கெளப்பு

தேனி பெரியகுளம்
போடி மதுரை கம்பம்
பேர ஒசத்தி புகழ் கெளப்பு

யெஹ் வாடிப்பட்டி வையம்பட்டி
ஆண்டிப்பட்டி உசிலம்பட்டி
புழுதி பறக்க மக்கா கெளப்பு

கெளப்பு கெளப்பு கெள கெளப்பு
கெளப்பு கெளப்பு கெள கெளப்பு
கெளப்பு கெளப்பு கெள கெளப்பு
கெளப்பு கெளப்பு கெள கெளப்பு

அடியேய்
நாங்களாம் பல சோலிகாரைங்க
இன்னைக்கு ஏஹேன்னு இருப்போம்
நாளைக்கு ஓஹோன்னு இருப்போம் (வசனம்)



பென்னிகுயிக்கு வந்ததால
பொங்க பானை பொங்குதுங்க
நன்றி சொல்லி வாழ்த்திடுவோம்
முல்லை ஆறை தந்தவங்க

பெருசோட பஞ்சாயத்து
மதிச்சோம் நாங்க கட்டுப்பட்டு
எளங்காளை துள்ளிக்கிட்டு
அடக்கும் வீரம் ஜல்லிக்கட்டு

சொத்து பத்த வித்து வந்து
தர்மம் காத்த எல்லைச்சாமி
வானம் பாத்து வாழும் பூமி
வாழ வச்சாரு வெள்ளைச்சாமி

அடிடா கொட்டு மொழங்க
நம்ம அமுதா இடுப்பு குலுங்க
ஏய்அடிடா கொட்டு மொழங்க
நம்ம அமுதா இடுப்பு குலுங்க

கெளப்பு கெளப்பு கெள கெளப்பு
கெளப்பு கெளப்பு கெள கெளப்பு


யோவ்
நாங்களும் வாடிபட்டி
சந்தையில வம்புளுது
வத்தல குண்டு சந்தையில
ஏலம்வுட்டு போறவளுக
எங்க கிட்டயேவா (வசனம்)

கும்மி குலவ
நாங்க கொட்டும் அழக
இளவட்டமெல்லாம் வட்டமிடும்
எங்க அழக
அம்மன் எதிர
பூமி தந்த கதிர
பொங்க வச்சி பூச பண்ணோம்
வம்சம் வளர

ஊரோரம் காவல் யாரு
அருவா ஏந்தி நிக்கிறாரு
களவாட யாரும் இல்ல
காவல் காப்பான் அய்யனாரு

அழியாத வீரமுங்க
உசுரா உழைக்கும் கூட்டமுங்க
பசியோட யாரும் வந்த
விருந்தே வைக்கும் வம்சம் நாங்க

நீயும் நானும் வேறு இல்ல
வாடா பங்காளி கூத்தாடலாம்
வீசும் காத்தும் பேதம் இல்ல
ஊரே ஒன்னாக கொண்டாடலாம்

அடிடா கொட்டு மொழங்க
நம்ம அமுதா இடுப்பு குலுங்க
ஏய்அடிடா கொட்டு மொழங்க
நம்ம அமுதா இடுப்பு குலுங்க

யெஹ் தேனி பெரியகுளம்
போடி மதுரை கம்பம்
பேர ஒசத்தி புகழ் கெளப்பு

யெஹ் வாடிப்பட்டி வையம்பட்டி
ஆண்டிப்பட்டி உசிலம்பட்டி
புழுதி பறக்க மக்கா கெளப்பு

கெளப்பு கெளப்பு கெள கெளப்பு
கெளப்பு கெளப்பு கெள கெளப்பு
கெளப்பு கெளப்பு கெள கெளப்பு
கெளப்பு கெளப்பு கெள கெளப்பு

பொங்கலோ பொங்கல்
பால் பானை பொங்க
பத்தும் பெருக
பாசங்கள் வெடிக்க
நோயும் நொடியும் தெரு ஓரம் போக
பொங்கலோ பொங்கல்
பொங்கலோ பொங்கல்
பொங்கலோ பொங்கல்