Kobam Enna Rasavukku

Kobam Enna Rasavukku Song Lyrics In English


பாடகி : பி சுஷீலா

பாடலாசிரியர் : காமகொடியன்

ஆரிராரிரோ ஆரிராரிரோ ஆரிரோ ஆரிரோ ஆரிரோ ஆராரோ

கோபம் என்ன ராசாவுக்கு முள்ளில்லாத ரோசாவுக்கு என் சொத்து சுகம் உன்னோட அன்பு முகம் இத புரிஞ்சிக் கொள்ளணும் எனது சாமியே

கோபம் என்ன ராசாவுக்கு முள்ளில்லாத ரோசாவுக்கு

உன்ன விட்டா சொந்தமில்ல என்னை விட்டு போகாதே உற்ற சனம் யாருமில்ல மாமாவே உன்ன விட்டா சொந்தமில்ல என்னை விட்டு போகாதே உற்ற சனம் யாருமில்ல மாமாவே

நீ அடிச்சா உன்னிடம்தான் ஓடி வந்து நான் அழுவேன் கண்டதுக் கோபம் ஒன்னு உனக்கு காட்டுது புத்தி ஒன்னு

விதி வசமா வரமா என் சாமி நல்லது கெட்டது நேரத்தில் பாத்துக்கணும் நம்பிக்கை வைப்பதை புத்தியில் சேத்துக்கணும்

கோபம் என்ன ராசாவுக்கு முள்ளில்லாத ரோசாவுக்கு


மாமன் அடிச்சாரோ மல்லிகைப்பூ செண்டாலே அத்த அடிச்சாளோ அரளிப்பூ செண்டாலே

கண்ணிருந்தும் மூடிக் கொண்டு காவலுக்கு போவாரோ கட்டுச் சோறில் நஞ்சை வச்சு உண்பாரோ கண்ணிருந்தும் மூடிக் கொண்டு காவலுக்கு போவாரோ கட்டுச் சோறில் நஞ்சை வச்சு உண்பாரோ

நன்றி கடன் மேலே வைப்பேன் நம்ம கடன் தீர்ந்து போச்சு உள்ளத சொல்லுகிறேன் நான் உள்ளுக்குள் வாடுகிறேன்

நீ சிரிச்சா சிரிப்பேன் என் சாமி கடைசி வரையில் பொண்ணுக்கு உன் மடிதான் கெடந்த பிறகும் என்னுயிர் உன்னிடம்தான்

கோபம் என்ன ராசாவுக்கு முள்ளில்லாத ரோசாவுக்கு என் சொத்து சுகம் உன்னோட அன்பு முகம் இத புரிஞ்சிக் கொள்ளணும் எனது சாமியே

கோபம் என்ன ராசாவுக்கு முள்ளில்லாத ரோசாவுக்கு