Konatha Sengarumbu |
---|
கோணாத செங்கரும்பு
கூடாது உன் குறும்பு
ஆசையாக அங்க இங்க
அழுத்திக் கடிக்கும் கட்டெறும்பு
பதமான செங்கழனி
பறிக்காத செவ்வெளனி
கோட வெயில கொறைக்கப் பொறந்த
சாரல் அடிக்கும் பூ மழ நீ
கோணாத செங்கரும்பு
கூடாது உன் குறும்பு
மன்மதன் வச்சக் குறி
பச்சக் கிளி மனசு
சம்மதம் சொல்லக் கூசும் சின்ன வயசு
சந்திரன் சூரியனும் வந்து
நின்னு வணங்கும்
இந்திரன் கண்ணு பட வந்த அழகு
தொந்தரவு பிஞ்சுல
வந்ததிந்த நெஞ்சுல
தூரத்துல வந்த வரவு
வாசம்
ஹா
புது வாசம்
ஹா
நேசம்
ஹா
சகவாசம்
ஹா இது பாசம் மாறாத
நேசம்தான்
இப்ப பரிசத்துக்கு உகந்த
மாசம்தான்
கோணாத செங்கரும்பு
கூடாது உன் குறும்பு
ஆஹ் ஆஹா
ஆசையாக அங்க இங்க
அழுத்திக் கடிக்கும் கட்டெறும்பு
எளம் பதமான செங்கழனி
பறிக்காத செவ்வெளனி
பாலுல மோரு பட்டா
விடிஞ்சதும் தயிரு
பாக்கயில் தவிக்குது இந்த உயிரு
ஹா அம்மாடி நீ இருக்கும் எடம்
ரொம்ப உயரம்
அத்த நெனக்கையிலே ரொம்பத் துயரம்
நான் புடிச்ச மாப்பிள்ள
நல்லதொரு மாப்பிள்ள
குத்தம் இல்லா சுத்த வைரம்
கூசும்
ஹா
ஒளி வீசும்
ஹா
பாசம்
ஹா
அதப் பேசும்
ஹா இது மோசம் போகாத
நேசம்தான்
வெறும் வேஷம் போடாத
பாசம்தான்
கோணாத செங்கரும்பு
கூடாது உன் குறும்பு
ஆசையாக அங்க இங்க
அழுத்திக் கடிக்கும் கட்டெறும்பு
அடி பதமான செங்கழனி
பறிக்காத செவ்வெளனி
கோட வெயில கொறைக்கப் பொறந்த
சாரல் அடிக்கும் பூ மழ நீ
தானான தானானானா
தன தனன்னான தந்தானன்னா