Konjam Thira |
|---|
கொஞ்சம் திர கொஞ்சம்
திர கண்ணே உந்தன் கண்கள்
வழி உள் இறங்க வேண்டும்
உள்ளுக்குள்ளே உள்ளுக்குள்ளே
என்ன என் உள்ளத்தாலே கண்டு
கொள்ள வேண்டும்
மறைந்து கிடக்கும்
மனதின் நிஜங்கள் ரகசியம்
அதிசயம் புதையலை அன்பே
எடுக்கட்டுமா
கொஞ்சம் திர கொஞ்சம்
திர கண்ணே உந்தன் கண்கள்
வழி உள் இறங்க வேண்டும்
உண்மையை சொல்ல
வா ஊமை போல் நடிக்கிறாய்
உதட்டிலே கசங்குதே காதல்
பூவே
மௌனம் என்னும்
சாவியால் வாயை நீ பூட்டினாய்
வாடினேன் தேடினேன் திறவு
கோலே
உன் வேடம் ஆஹா
ஹாஹாஹா ஆஹாஹா
பொய் வேடம் ஆகாது மெய்யாகி
போகாது உன் வாயால் உண்மை
நீ சொல்லு அதை நான் கேட்பேன்
கொஞ்சம் திர கொஞ்சம்
திர கண்ணே உந்தன் கண்கள்
வழி உள் இறங்க வேண்டும்
உள்ளுக்குள்ளே உள்ளுக்குள்ளே
என்ன என் உள்ளத்தாலே கண்டு
கொள்ள வேண்டும்
பௌர்ணமி கண்களால்
பாரடி கண்மணி வெளிச்சத்தை
வேண்டுதே எனது உலகே
தென்றலின் வார்த்தையால்
பேசடி பொன்மணி மலர தான்
துடிக்குதே இதய மலரே
மலர் மேனி ஆஹா
ஹாஹாஹா ஆஹாஹா
மலர் மேனி காயங்கள்
வந்தாலே மறைந்தோடும்
உள்ளத்தில் உள்ள காயங்கள்
ஆறும் அன்பாலே
கொஞ்சம் திர கொஞ்சம்
திர கண்ணே உந்தன் கண்கள்
வழி உள் இறங்க வேண்டும்
உள்ளுக்குள்ளே உள்ளுக்குள்ளே
என்ன என் உள்ளத்தாலே கண்டு
கொள்ள வேண்டும்
மறைந்து கிடக்கும்
மனதின் நிஜங்கள் ரகசியம்
அதிசயம் புதையலை அன்பே
எடுக்கட்டுமா
கொஞ்சம் திர கொஞ்சம்
திர கண்ணே உந்தன் கண்கள்
வழி உள் இறங்க வேண்டும்
