Kundrakudi Konda Vela

Kundrakudi Konda Vela Song Lyrics In English


குன்றக்குடி கொண்ட வேலா
சங்கரன் பாலா தாருமைய்யா
பன்னிரெண்டு கண்ணால் பாருமைய்யா
பன்னிரெண்டு கண்ணால் பாருமைய்யா
பாடுகளை சொன்னால் தீருமைய்யா

குன்றக்குடி கொண்ட வேலா
சங்கரன் பாலா தாருமைய்யா
பன்னிரெண்டு கண்ணால் பாருமைய்யா
பாடுகளை சொன்னால் தீருமைய்யா

தங்கை இளநங்கை குலமங்கை
அவள் செங்கை
மண மாலைக் கொண்ட நாதர் வாழ
மஞ்சள் கொண்டு வஞ்சி வாழ
அருளே பரம்பொருளே அன்புக் கடலே ஞானக் கனலே
அருளே பரம்பொருளே அன்புக் கடலே ஞானக் கனலே

குன்றக்குடி கொண்ட வேலா
சங்கரன் பாலா தாருமைய்யா
பன்னிரெண்டு கண்ணால் பாருமைய்யா

படியேறிடும் அடியார் துயர் பொடியாகிட
வடிவேல் தனை கரம் ஏந்திய பெருமான் உனை
தொழுதால் வந்து அழுதால் காலில் விழுந்தால்

உற்ற பழி பாவமும் பல தோஷமும்
அறியாமையும் அபச்சாரமும்
கதிர் தேடிய பனிப் போலவே விலகும்
இன்பம் விளையும் துன்பம் வடியும்

சர்ப்ப காவடி நாற்கொடை ஆட சிந்து பாட
உந்தன் சன்னதி வாசலை நாட
அருள் கூட இருள் ஓட
நிதம் நிதம் தொழும் மனம்
நினைத்திடும் வரம் தரும் குமரா எங்கள் அமரா
மறை முதல்வா அரும்புதல்வா


பதமாடிடும் வடிவங்களில்
உயர்வாகிடும் மயில் மீதினில்
நடமாடிடும் குமரேசனும் நீயன்றோ
தந்தை தாயன்றோ அடிமை நானன்றோ

உன்னை ஒருபோதிலும் மறவாதவள்
முருகா எனும் வரும் வேளையில்
விஷ நாகமும் விலகாமலே தீண்டுமோ
சாபம் தீருமோ என்ன நேருமோ

இந்த வேளையில் நீ வந்து காக்க
இசை கேட்க கையில்
வேல் கொண்டு வா எந்தன் எல்லை
யாருமில்லை உந்தன் பிள்ளை
உனைவிட துணையெது உனக்கொரு இணையெது
குகனே சக்தி மகனே ஆறுமுகனே குருபரனே

ஆதரிக்க நீயிருக்க சோதரிக்கு துன்பமென்ன
முருகா முருகா முருகா
அம்மையென்றும் அப்பனென்றும்
உன்னையன்றி யாருமில்லை
குமரா குமரா குமரா

பெண் முகத்தின் குங்குமத்தை
கனிவு கொண்டு காக்க வேண்டும்
வருவாய் வருவாய் வருவாய்
கந்தவேளை எண்ணி எண்ணி
வந்தவேளை காவல் நிற்கும்
வடிவேல் வடிவேல் வடிவேல்