Kuzhandaiyum Deivamum

Kuzhandaiyum Deivamum Song Lyrics In English


குழந்தையும்
தெய்வமும் குணத்தால்
ஒன்று குற்றங்களை மறந்து
விடும் மனத்தால் ஒன்று

நடந்ததெல்லாம்
நினைப்பது தான் துயரம்
என்று ஞானிகளும் மேதைகளும்
சொன்னார் அன்று

குழந்தையும்
தெய்வமும் குணத்தால்
ஒன்று குற்றங்களை மறந்து
விடும் மனத்தால் ஒன்று

பிறந்து வந்த
போது நெஞ்சம்
திறந்திருந்தது

அந்த பிள்ளையோடு
தெய்வம் வந்து
குடி இருந்தது

வயது வந்த
பிறகு நெஞ்சில்
மயக்கம் வந்தது

அங்கு வாழ்ந்திருந்த
தெய்வம் கொஞ்சம்
விலகி சென்றது

குழந்தையும்
தெய்வமும் குணத்தால்
ஒன்று குற்றங்களை மறந்து
விடும் மனத்தால் ஒன்று

உச்சி வெயில்
சூரியனை மேகம்
மூடுது

நம் உள்ளம்
என்னும் சூரியனை
கோபம் மூடுது

காற்று வந்தால்
மறுபடியும் மேகம்
ஓடுது


பேசி கலந்து
விட்டால் கோபம் மாறி
நேசம் ஆகுது

குழந்தையும்
தெய்வமும் குணத்தால்
ஒன்று குற்றங்களை மறந்து
விடும் மனத்தால் ஒன்று

பிள்ளைகளாய்
இருந்தவர் தான் பெரியவர்
ஆனார்

அந்த பெரியவர்கள்
கோபத்தினால் சிறியவர்
ஆனார்

கள்ளமில்லா
உள்ளத்தினால்
பிள்ளைகள் எல்லாம்

என்றும் கண்ணெதிரே
காணுகின்ற தெய்வங்கள்
ஆனார்

குழந்தையும்
தெய்வமும் குணத்தால்
ஒன்று குற்றங்களை மறந்து
விடும் மனத்தால் ஒன்று

நடந்ததெல்லாம்
நினைப்பது தான் துயரம்
என்று ஞானிகளும் மேதைகளும்
சொன்னார் அன்று

குழந்தையும்
தெய்வமும் குணத்தால்
ஒன்று குற்றங்களை மறந்து
விடும் மனத்தால் ஒன்று