Love Love Dhaan

Love Love Dhaan Song Lyrics In English


ஐ லவ் யூ ஐ லவ் யூ

எல் ஓ வீ  ஈ
லவ் தான்
எல் போர்டு அல்ல
நான் தான்
எல்லாமே ஹே புரிஞ்சவன்
லவ் என்னென்று
அஹஹாஹஹா அறிஞ்சவன்

எல் ஓ வீ  ஈ
லவ் தான்
லவ் பேர்ட்
இங்கே நான் தான்
என்னோடு பறக்க வா
ஒன்றாக கலக்க வா

நேற்று இரவில் நினைவினில்
உதித்தவள் நீ தானே
காற்றுவெளியில் கனவினில்
மிதந்தவன் நான் தானே ஆஹா

அன்றாடம் உருகிடும்
ஆசை புரிந்தது
அம்மாடி இளமையின்
வேகம் தெரிந்தது

முன்னும் பின்னும்
வண்ணம் மின்னும்
மங்கை என்னும்
தங்கக் கிண்ணம்
ஒரு தரம் பருகிட
வந்தாலே என்னம்மா

எல் ஓ வீ  ஈ
லவ் தான்
லவ் பேர்ட்
இங்கே நான் தான்


எல்லாமே ஹே புரிஞ்சவன்
லவ் என்னென்று
அஆ ஹா அறிஞ்சவன்

நீல அலைகள் நிலம் வந்து
கலந்தது இப்போது
நானும் உனது மடி வந்து
கிடப்பது எப்போது ஹா ஹா

கண்ணா நீ நடத்திடு
காதல் திருமணம்
கட்டாயம் கிடைத்திடும்
தேவி தரிசனம்

மேளம் என்ன
மாலை என்ன
காலம் என்ன
வேளை என்ன
பழரசம் பருகிட
பஞ்சாங்கம் என்னம்மா

எல் ஓ வீ  ஈ
லவ் தான்
எல் போர்டு அல்ல
நான் தான்

என்னோடு பறக்க வா
ஹே ஒன்றாக கலக்க வா