Maadu Izhutha |
|---|
மாடுழுத்த வண்டி எல்லாம்
இழுத்துப் பாத்தேன்
நான் மனுஷனா மிருகமா
ஒழச்சிப் பாத்தேன்
கஷ்டப்பட்ட போதிலும்
காசு வந்து சேரல
காசு வந்த போதிலும்
மீதம் ஏதும் ஆகல
மாடுழுத்த வண்டி எல்லாம்
இழுத்துப் பாத்தேன்
நான் மனுஷனா மிருகமா
ஒழச்சிப் பாத்தேன்
கஷ்டப்பட்ட போதிலும்
காசு வந்து சேரல
காசு வந்த போதிலும்
மீதம் ஏதும் ஆகல
அடி மாரியம்மா
என்ன இது காளியம்மா
எங்க வாழ்க்கை எல்லாம்
கோணலோ கோணலம்மா
மாடுழுத்த வண்டி எல்லாம்
இழுத்துப் பாத்தேன்
நான் மனுஷனா மிருகமா
ஒழச்சிப் பாத்தேன்
மல்லிகையும் அள்ளிக் கட்டி
மீனாட்சி குங்குமமும்
மங்கலமாச் சொல்லி விக்க
போகாத வீதி இல்ல
காசு வந்த கணக்கப் பாத்தா
சரக்கு வாங்கப் போதாது
கைச் சரக்கு மீதம் வந்தா
மத்த நாளு விக்காது
ஏழைங்க பொழப்பு
கஷ்டத்துலதான்
நீயும் நானும்
இங்கு என்ன செய்ய
இறைவன் எழுத்து
இப்படித் தானுன்னா
இந்திய அரசும்
என்ன செய்யும்
எத்தன காசு கெடச்சாலும்
பத்தலப்பா
என் நெஞ்சமும் கைகளும்
எப்போதும் சுத்தமப்பா ஹோய்
மாடுழுத்த வண்டி எல்லாம்
இழுத்துப் பாத்தேன்
நான் மனுஷனா மிருகமா
ஒழச்சிப் பாத்தேன்
கஷ்டப்பட்ட போதிலும்
காசு வந்து சேரல
காசு வந்த போதிலும்
மீதம் ஏதும் ஆகல
அடி மாரியம்மா
என்ன இது காளியம்மா
எங்க வாழ்க்கை எல்லாம்
கோணலோ கோணலம்மா
சுவரில் ஒரு
போஸ்டரத்தான்
சுத்தமாக ஒட்டிப் பாத்தேன்
போரிங் போட்டு கை கடுக்க
பம்பு செட்டும் போட்டுப் பாத்தேன்
கவரிங் நகை
செஞ்சு பாத்தேன்
தவறிக் கூட விக்கவில்ல
கடல வித்தும் காசும் வல்ல
ஒடல விக்க வழியும் இல்ல
பட்டியில தொட்டியில
ஏரெடுத்து நான் உழுதேன்
வட்டி கட்டி மாளவில்ல
நீர விட்டு நான் அழுதேன்
பள்ளியில எங்க படிச்சேன்
நாடகத்தில் நான் நடிச்சேன்
வீதியில தூங்கி முழிச்சேன்
வாழ்வதற்கு நான் துடிச்சேன்
பீச்சுல சுண்டல
வித்து வித்துப் பாத்து
வளந்து போனது என் உடம்பு
ரோட்டுல காட்டுல
வாழ்வ தேடித் தேடி
கூடிப் போனதையா என் வயசு
எத்தன காசு கெடச்சாலும்
பத்தலப்பா
என் நெஞ்சமும் கைகளும்
எப்போதும் சுத்தமப்பா ஹோய்
மாடுழுத்த வண்டி எல்லாம்
இழுத்துப் பாத்தேன்
நான் மனுஷனா மிருகமா
ஒழச்சிப் பாத்தேன்
கஷ்டப்பட்ட போதிலும்
காசு வந்து சேரல
காசு வந்த போதிலும்
மீதம் ஏதும் ஆகல
அடி மாரியம்மா
என்ன இது காளியம்மா
எங்க வாழ்க்கை எல்லாம்
கோணலோ கோணலம்மா
