Maalai Muthu Maalai

Maalai Muthu Maalai Song Lyrics In English


பாடலாசிரியர் : கண்ணதாசன்



மாலை முத்து மாலை கொண்டு மாதவி வந்தாள் மறுபடியும்

காலம் லால் லா சங்க காலம் லால் லா அங்கு காவிய பூங்குயில் பாடுதம்மா

மாலை முத்து மாலை



நாடக மாது லால் லாலா காதலின் தூது லால் லாலா நாள் படும்போது கனிந்ததம்மா

ஆடாத ஊஞ்சல் லால் லாலா கோவலன் தோளில் லால் லாலா ஆனந்த பார்வை கலந்ததம்மா

எழுந்தாள் மலர்ந்தாள் சிரித்தாள் அணைத்தாள் எடுத்தாள் கொடுத்தாள் தன் மணமேடையை

மாலை முத்து மாலை கொண்டு மாதவி வந்தாள் மறுபடியும்


மாலை முத்து மாலை



தேவியினாலே லால் லாலா காவியம் மாறி லால் லாலா சிலப்பதிகாரம் திரும்புதம்மா

கோவில் வாழும் லால் லாலா குலமகள் நெஞ்சம் லால் லாலா விலைமகள் என்றே மயங்குதம்மா

இவரே கனவு இவரே நினைவு இன்றே உலகம் பொன் மயமானது

மாலை லாலா முத்து மாலை லாலா கொண்டு மாதவி வந்தாள் மறுபடியும்

காலம் லால் லா சங்க காலம் லால் லா அங்கு காவிய பூங்குயில் பாடுதம்மா

மாலை முத்து மாலை