Maamaa Pillai Maapille |
|---|
மாமா பிள்ளை மாப்பிள்ளை
மாலையிட்டான் தோப்பிலே
மாமா பிள்ளை மாப்பிள்ளை
மாலையிட்டான் தோப்பிலே
ஜாதி சனம் பாக்கலேஏ
தடை இருந்தும் நினைக்கலே
மாமா பிள்ளை மாப்பிள்ளை
மாலையிட்டான் தோப்பிலே
அம்மாப் பொண்ணு ராஜாத்தி
அழகு காட்டும் கண்ணாடி
கட்டி வச்ச பூவும் வாடவில்லையே
தொட்டு வச்ச பொட்டும்
இன்னும் மாறவில்லையே
அம்மாப் பொண்ணு ராஜாத்தி
அழகு காட்டும் கண்ணாடி
தொட்டு வந்தா பின்னாடிஈ
தொடர்ந்து வந்தா முன்னாடி
அம்மாப் பொண்ணு ராஜாத்தி
அழகு காட்டும் கண்ணாடி
பூ முடிச்சான் தலையிலே
பொட்டு வச்சான் முகத்திலே
பூ முடிச்சான் தலையிலே
பொட்டு வச்சான் முகத்திலே
கட்டி வச்சான் கையிலே
கலந்து விட்டான் நெஞ்சிலே
மாமா பிள்ளை மாப்பிள்ளை
மாலையிட்டான் தோப்பிலே
கட்டி வெல்லம் மாம்பழம்
கரைச்சு வச்ச தேன் குடம்
கட்டி வெல்லம் மாம்பழம்
கரைச்சு வச்ச தேன் குடம்
வெட்டி விட்டா கண்ணிலேஏ
நான் விழுந்து விட்டேன் பெண்ணிலே
அம்மாப் பொண்ணு ராஜாத்தி
அழகு காட்டும் கண்ணாடி
மானங் காக்கச் சேலையும்
மனசு போல புருஷனும்
சேர்ந்து வந்த பொண்ணுக்கு
தெய்வந் தோணும் கண்ணுக்கு
கூட்டி வச்ச கடவுளே
கோடி காலம் வாழ்கவே
வாழ வைத்த கடவுளே
வாழ்க வாழ்கவே
வாழ வைத்த கடவுளே
வாழ்க வாழ்கவே
மாமா பிள்ளை மாப்பிள்ளை
மாலையிட்டான் தோப்பிலே
அம்மாப் பொண்ணு ராஜாத்தி
அழகு காட்டும் கண்ணாடி
இருவர் : ஆஅஆஅஆஆஹ்
ஓஒஓஒஓஹ்ம்ம்ம்ம்ம்ம்ம்ஹ்ம்ம்
