Maaman Magale

Maaman Magale Song Lyrics In English


பாடல் ஆசிரியர் :  யுக பாரதி

மாமன் மகளே மாறாப்பு மயிலே மாமன் மகளே மாறாப்பு மயிலே

காத்துல உன் வாசம் கருங்கல்லுல உன் வாசம் அம்மாடி என் பேச்சு உன்கூட கத பேசும்

நாக்குல உன் வாசம் நடு நெஞ்சுல உன் வாசம் பொல்லாத உன் மூச்சில் மல்லாந்தே உயிர் கூசும்

ஐயோ உன் கொலுசு மணி ஆள பொலி போடுதடி கண்ணே மனசுக்குள்ள பட்டாசு வெடிக்குதடி

கண்டாங்கி பொடவையுமே கை வெரல கேக்குதடி நீ முன்னால நின்னா மண்வாசம் தூக்குதடி

மாமன் மகளே மாறாப்பு மயிலே பொழுது விடியுமட்டும் போர்வைக்குள்ளே கூவு கூவு குயிலே


கண்ணாடி வளவி காட்டுற காட்டுல தன்னால ஒடஞ்சேனே தெரிஞ்சுக்க வந்தாலும் நெதம் நெதம் தொலஞ்சேனே

பனங்கள்ள குடிச்சது போல் ஒடம்புல ஒரு மெதப்பு வெளியவும் சொல்லாம மனசுல பல நெனப்பு

வெயிலோட மழ சேர உயிர் தானா தழும்புதடி குயில் கூவ எளங்காத்தும் தெச மாறி திரும்புதடி

மடிமேல சரிஞ்சாலே மயில் தோக வருடுதடி உன நாளும் தொண சேர்ந்தா அது வரமே தருமே சொகமே

மாமன் மகளே மாறாப்பு மயிலே பொழுது விடியுமட்டும் போர்வைக்குள்ளே கூவு கூவு குயிலே