Maamanukkum Machanukkum

Maamanukkum Machanukkum Song Lyrics In English


மாமனுக்கும் மச்சானுக்கும் ஹேய்
வித்தியாசம் என்ன இருக்கு
காதலுக்கும் கச்சேரிக்கும் ஹேய்
வந்திருச்சி வேளை நமக்கு

பாக்கறதென்ன மாமா
நான் கேக்கறதென்னதாம்மா
பாக்கறதென்ன மாமாஹோய்
நான் கேக்கறதென்னதாம்மா

 ஹாமாமனுக்கும் மச்சானுக்கும் ஹேய்
வித்தியாசம் என்ன இருக்கு
காதலுக்கும் கச்சேரிக்கும் ஹேய்
வந்திருச்சி வேளை நமக்கு

ஆட்டம் என்ன பாட்டம் என்ன
ஆள் புடிக்க வெட்கம் விட்டு
ஆளா பறந்து நிக்கிற
அடி ஆத்தா எதுக்கு சொக்குற

ஆத்திரத்தை ஏத்தி விட்டு
ஆசைகளை பொங்க விட்டு
பாடாபடுத்தி வைக்கிற
என்ன பாத்தா ஒதுங்கி நிக்கிற

அன்னாடம் அடிக்கடி நிறம் மாறும்
அம்மாடி உனக்கொரு நமஸ்காரம்
பின்னால வருகிற இளமாது
சொன்னாலும் உன்னை விட்டு விலகாது


ஒட்டாதே நீ என்னோட ஆட
தொட்டாட நான் முட்டாளும் இல்லை
ஒம்மேல நான் பித்தாகிப் போனேன்
முத்தாடும் பூங்கொத்தாக ஆனேன்

ஒட்டி ஒட்டி வந்தா
ஒட்ட விடுவேனா
ஏண்டி உனக்குத்தான் இப்ப
என் மேல கிறுக்குத்தான்

மாமனுக்கும் மச்சானுக்கும் ஹேய்
வித்தியாசம் என்ன இருக்கு
காதலுக்கும் கன்றாவிக்கும் ஹேய்
வெவ்வேறு அர்த்தம் இருக்கு

பாக்கறதென்ன மாமா
நான் கேக்கறதென்னதாம்மா
பாக்கறதென்ன பாமாஹேய்
நீ கேக்கறதென்ன போம்மா

ஹா மாமனுக்கும் மச்சானுக்கும் ஹேய்
வித்தியாசம் ரொம்ப இருக்கு
காதலுக்கும் கன்றாவிக்கும் ஹேய்
வெவ்வேறு அர்த்தம் இருக்கு
ஹேய் ஆஅ